மேல்Kind ஈ-புக்

நிகழும் தாரண ஆண்டு ஃபிப்ரவரி பதினான்காம் தேதியாம் காதலர் நண்பர்கள் தினமாம் லவ்லெட்டர் மற்றும் ரூ. 395.95 சங்கமிக்கும் சுபயோக சுபதினத்தில் மேல்Kind ஹீ ஹீ ஹீ... ஈஈ ஈஈ ஈ-புக் ஒன்று வெளியாக இருக்கிறது. பேச்சுலர்களும் பேச்சிலர்களும் தங்கள் படைப்புகளை மேல்Kindக்கு meenakshisankar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தால் E-bookஇல் சேர்க்க ஏதுவாக இருக்கும்.


படைப்பாளிகளுக்கான நிபந்தனைகள்

 1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகள் மட்டுமே ஒரு நபர் அனுப்பி வைக்கலாம். ஒன்றுக்கும் குறைவான படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.


 2. படைப்பு எந்த விஷயத்தைப் பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம். எனினும், தந்தைக்குலம் சந்திக்கும் சமூக, அரசியல் ரீதியான ப்ரச்சனைகள், ஆண்கள் பணியகச்சூழலில் சந்திக்கும் ப்ரச்சனைகள், வாழ்க்கை ப்ரச்சனைகள், சுகமான அனுபவங்கள், மலரும் நினைவுகள் போன்றவை சார்ந்ததாக படைப்பு இருந்தால் ஈரேழு உலகிலும் உள்ள ஆணினம் வாழ்த்திப் போற்றும்.

 3. கண்டிப்பாக ஜாதி, அரசியல் சார்ந்த படைப்புகளை அனுப்பிவைக்க வேண்டாம். ஆனால் ஔவையாரே ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லியிருப்பதால், ஆண்ஜாதி(யைப் போற்றியும்), பெண்ஜாதி(யைத் தூற்றியும்) சம்பந்தப்பட்ட படைப்புகள் விரும்பி வரவேற்கப்படுகின்றன.

 4. சப்பாத்திக்கட்டை சிண்ட்ரோம், இலுப்பக்கரண்டிஃபோபியா இருக்கும் கணவன்மார்கள் 'விபத்து'களிலிருந்து தப்பிக்கும்பொருட்டு புனைப்பெயரிலேயே படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

 5. மகளிருக்கு 0.33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதால் தாய்க்குலங்களும் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

 6. கிளுகிளுப்புக் கதைகளுக்கென தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஆறாவது நிபந்தனையாக இருக்கவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஏனெனில், அது வெறும் அறிவிப்பு மட்டுமே. அதனால், ஆபாசம் தவிர்த்து அறிவுபூர்வமான (?!) விஷயங்கள் இருப்பதில் தவறில்லை.

 7. சமீபத்திலோ வெகுநாட்களுக்கு முன்னரோ கண்ணாலம் கட்டினவுங்கோ.... ச்சே... லோக்கல் பாஷபா...திருமணம் செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏதேனும் சொல்ல நினைத்தால் (தைரியமாக) இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 8. காதலுக்கும் கஷ்டத்துக்கும் மொழி ஒரு தடையில்லை என்பதால், மேல்Kind ஈபுக்குக்கும் மொழி ஒரு தடை இல்லை. ஆங்கிலத்தில் எழுதுவதுதான் வசதிப்படும் என்றால் ஆங்கிலத்திலேயே படைப்புகளை எழுதி அனுப்பலாம். விரும்பினால், மொழிபெயர்த்தோ அல்லது அப்படியே ஆங்கிலத்திலேயேவோ பிரசுரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 9. படைப்புகளை அனுப்பி வைக்க ஃபிப்ரவரி 10ஆம் தேதி வரை நேரமிருக்கிறது ஐயா. எனவே ரோசிச்சி, யோசிச்சி பட்டையை ஓட்டவும் (பின்ன எத்தனை நாளைக்குத்தான் பட்டையைக் கிளப்பறதோடயே நெறுத்திக்கறது?).


ஈ-புக் பற்றி...
 • ஈ-புக்கின் முதல் பிரதியை யாஹு File Transfer உதவியுடன் பிரபலமான ஒரு சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொள்வார்.

 • ஈ-புக்கில் விளம்பரங்கள் செய்ய விரும்புவோர் மேற்கண்ட மின்னஞ்சலையே தொடர்பு கொள்ளலாம். ஈ-புக்கைப் போலவே விளம்பரங்களும் இலவசம். ஆனால் 23,854 விளம்பரங்களுக்கு மட்டுமே இடம் இருப்பதால், உங்கள் விளம்பரத்திற்கு முந்துங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

ennikku last date?

7:31 PM  
Blogger icarus prakash said...

previous comment was mine

7:32 PM  
Anonymous Anonymous said...

ஃபிப்ரவரி 10ஆம் தேதிவரை நேரம் இருப்பதை மேற்கண்ட பதிவிலும் சிகப்பாக சேர்த்துவிட்டேன். என் வலைப்பதிவு வாழ்வில் இந்த சிகப்புக்கரை ஒரு மாறாத வடுவாக கவனக்குறைவை எனக்கு நினைவுபடுத்தட்டும்.

By: சு. க்ருபா ஷங்கர்

9:25 PM  
Anonymous Anonymous said...

புகைப்படங்கள் இருக்குமா :-P

By: பாலா சுப்ரா

10:38 PM  
Anonymous Anonymous said...

கண்ண்ண்ண்ண்டிப்பா இருக்கும். ;-)

By: சு. க்ருபா ஷங்கர்

10:53 PM  
Anonymous Anonymous said...

மேல்கைன்ட் மேதாவிகளே அதை ஏப்ரல் 1ம் தேதி வெளியிடுவது இன்னும் பொருத்தமன்றோ
இப்படிக்கு பீமேல்கைன்ட் உறுப்பினள் :)

6:51 PM  
Anonymous Anonymous said...

மன்னிக்கவும். ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஆண்கள் தினக் கொண்டாட்டத்தில் சற்று பிசியாக இருப்போம்.

By: சு. க்ருபா ஷங்கர்

9:47 PM  
Anonymous Anonymous said...

\
][P][P]P[

2:30 PM  
Anonymous Anonymous said...

sss.... ippave kannai kattuthe!

3:28 PM  
Blogger ராம்கி said...

sss.... ippave kannai kattuthe!

3:29 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ