விருந்தினர் பதிவு: ரஜினி ராம்கி - 2

விஜய் டிவியின் 'அழகி'விஜய் டிவில புதுசா ஒரு நிகழ்ச்சி. அழகியாம்! வழக்கம்போலவே புதுமையா ஒரு விஷயம் செஞ்சிருக்காங்க. நிகழ்ச்சியோட நோக்கம் (ஹி...ஹி அப்டீன்னு சொல்லிக்கிறாங்கோ!) 'தமிழச்சி'களை கண்டுபிடிச்சு என்கரேஜ் பண்றதாம்!

'குலுக்கல்' முறையோ என்னவோ எப்படியோ ஒரு 200 பொண்ணுங்களை (இன்னும் கல்யாணமாகாதவங்க மட்டும்!) செலக்ட் பண்ணி அவங்ககிட்ட தனித்தனியா கேள்வி கேட்டு பெஸ்ட் தமிழச்சியை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம். வர்ற பொண்ணுங்களெல்லாம் சமூக சேவை செய்யப்போறேன், சினிமாவுல நடிப்பேன், அரசியலுக்கு வருவேன், மதர் தெரஸா மாதிரி ஆவேன்னு டயலாக் எடுத்து வுடறதை கேட்டு காதே புளிச்சுப் போயிடுச்சு... இது வழக்கமான அழகி
போட்டியில்லைன்னு தேர்வுக்கமிட்டியிலிருந்து ஒரு அம்மா வந்து அட்வைஸ் பண்ணினார். ஏதோ ஒரு நடிகையை அழைச்சுட்டு வந்து கருத்து கேட்டாங்க. அவங்களும் பொண்ணுங்களை புடவை சகிதம் பார்க்கிறது அழகா ருக்குதுன்னு இங்கிலீஷில் சொல்லி வைச்சாங்க. சம்பந்தப்பட்ட நடிகை என்ன காஸ்ட்யூம்ல வந்திருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்!

தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் 'மக்கள் யார் பக்கம்' கோபியும் ஒருத்தர் (மனுஷன், கொஞ்சூண்டு தொப்பையை குறைச்சிருக்கார்!). புற அழகை விட பெண்களின் அறிவுதான் உண்மையான அழகுன்னு தான் நினைக்கிறதா சொன்னார். மனுஷனுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு, முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாவது சுற்றுக்கு போகும் பெண்களின் பட்டியலை அறிவிக்கிற வேலை கோபிக்கு. நான் நம்பர் சொல்றவங்களெல்லாம் எழுந்திரிச்சு வெளியே போயிடலாம்னார். ரெண்டு பெண்மணிகள் என்னோட நம்பரை நீங்க சொல்லவேயில்லை... நாங்க வெளியே போக முடியாதுன்னு முஷ்டியை உயர்த்த
செம காமெடி. 'பார்த்தா கல்யாணம் ஆகாதவங்க மாதிரியே
தெரியலையே'ன்னு தேர்வுக் கமிட்டியிலிருந்த யாரோ கேட்டு வைக்க களேபர மேடையில் நடந்த உச்சபட்ச காமெடி காட்சிகளை காமிரா அப்படியே விழுங்கிக் கொண்டது!

அடுத்த ரவுண்டு, செம கலக்கல். பாட் கேட்வாக்! அதாவது பட்டுப்புடவை கட்டிக்கிட்டு கையிலொரு பானையை சுமந்தபடி நடந்து வரவேண்டும். சிலருக்கு புடவை கட்டத்தெரியலைன்னா பல பேருக்கு பானை புடிக்கத் தெரியலை. சிரிச்சுக்கிட்டே நடந்து வரணுமா அல்லது சீரியஸா நடந்துவரணுமான்னு பெரிய சந்தேகம். இந்த ரவுண்டிலேயே மொத்த டீமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ்நாட்டுல பல பொண்ணுங்களுக்கு சரியா புடவை கட்டத்தெரியாதுன்னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியப்படுத்தின விஜய் டிவியை என்ன பண்ணலாம்?!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

மனுஷனுக்கு (ramki) நேரம் சரியில்லை போலிருக்கு.;-)

By: S Krupa Shankar

5:01 PM  
Anonymous Anonymous said...

why dont you participate with other malekind
members !

By: anoonnymouse

6:24 PM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Dear anoonnymouse,

All malekind members are welcome to participate. Please send your entries to m_meenaks@yahoo.com - This has been informed earlier too.

9:05 AM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ