கதை, திரைக்கதை, வசனம்
-இறைவன்

  • எங்கள் பணியகத்து க்ராஃபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்றால் யாராலாவது நம்ப முடியுமா?
  • யாஹுவிலிருந்து ரெடிஃப் மெய்லுக்கு கடிதம் வந்து சேர ஏன் தாமதம் ஆகிறது?


* * * * ** * * * ** * * * ** * * * *

"இதான் என்னோட கணிப்பொறி." என்ற வரிதான் நான் அந்தப்பெண்ணுடன் முதல் முதலாகப் பேசிய வரி.

பெண்பார்க்கப்போனப்போ கூட 'தனியா பேசிட்டு வாங்க' என்றதும் 'என்ன, எல்லாரும் நிறைய சீரியல் பாப்பேளாக்கும்?' என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.

ஆனால் திங்கட்கிழமை மறுபடியும் வீட்டிற்கு குடும்ப சகிதமாக எல்லோரும் வந்திருந்தனர். பிறகு நான், அந்தப்பெண், மற்றும் என் கம்ப்யூட்டர் மட்டும் ஒரு தனி அறையில். அப்போதான் 'இதுதான் என்னோட கணிப்பொறி.'

"பொன்னியின்செல்வன் படிச்சாச்சா?"

"கேள்விப்பட்டு இருக்கேன்."

அப்போ படிச்சதில்லை! ஆஹா! போச், போச்!

"அப்போ வேற எந்த கத புக்கும் கூட படிச்சதே இல்லையா?" என்று ஆவலுடன் கேட்டேன்.


"ம்ஹூம். டி.வி.தான் பார்ப்பேன். நிறைய சீரியல்ஸ் பாப்பேன்."

வந்தியத்தேவன் புடிக்குமா, சேந்தன் அமுதன் புடிக்குமான்னு தெனமும் பேசிப்பேசி சந்தோஷப்படலாம்னு நெனச்சேன். அருள்மொழிவர்மன் யானையோட காதுல என்னமோ சொல்லி யானை வேகமா போனது, அந்தக்காலத்துலயே கல்கிக்கு ரஜினி பத்தி ஐடியா இருந்துருக்குன்னு சொல்லலாம்னு நெனச்சேன். ஆழ்வார்க்கடியான் என்ன ஒரு புத்திசாலி! வந்தியத்தேவன் ரவிதாசன் என்கௌண்டர் நெனச்சு நெனச்சு பார்த்து என்ஜாய் பண்ணலாம். "நீங்கள் இந்த வாளைப்பற்றி கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது" டயலாக் என்ன ஒரு டயலாக்! அப்பறம் வந்தியத்தேவன் போன எடத்துக்கெல்லாம் போய்ட்டு வரலாம் நாமளும். பூங்குழலி புடிச்சா கோடியக்கரைப்பக்கமா போகலாம். குந்தவை புடிச்சா பழையாறைக்கும் போய்ட்டு வரலாம். ரெண்டும் புடிச்சிருந்தா பெரியகோயில்ல போய் கல்வெட்டு படிக்க் கத்துக்கலாம். "கொடுத்தார் கொடுத்தனவும்" கல்வெட்டு எங்க இருக்குன்னு பார்கலாம்.

சரி வுடு. ஜெயமோகன், சுந்தரராமசாமி என்று எல்லாம் என்னைப்போலவே இந்தப்பெண்ணுக்கும் ஒன்றும் புரியாது.

"நமக்கு கல்யாணம் ஓக்கே ஆனாலும் எப்படியும் நிறைய நாள் இருக்கு இல்லையா? கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிங்க, ப்ளீஸ். நானே வாங்கித் தரட்டுமா?" என்றேன்.

"ம். சரி. புக் வாங்கி அனுப்புங்க. உள்ள உங்க ஃபுல்சைஸ் ஃபோட்டோ ஒன்னு வெச்சு..."

புத்தகவாசமே கிடையாதாம். மிச்ச விஷயத்துக்கெல்லாம் போகலாம்.

"என்கிட்ட நீங்க எதாவது கேக்கணுமா? நானே ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கேன்." என்றேன்.

"ம்ம். கல்யாணம் ஆனப்பறம் காலேஜ்க்கு எதுல போறது?"

"ட்ரெய்ன் இருக்கே..."

"ம்ஹூம். நீங்க கொண்டு விட முடியுமா, ப்ளீஸ்."

"சரி, எத்தனை மணிக்கு காத்தால?"

"ஒரு 7:30, 7:45க்கு களம்பினா போதும்."

"ஆ, அப்போ கொறைஞ்சது 7:00 மணிக்காவது எழுந்துக்கணுமா! எனக்கு 7:00 மணி எல்லாம் நடுராத்தி மாதிரி.... "

"கொஞ்ச நாளைக்கு மட்டும். அப்பறம் பழகினப்பறம் நானே போய்க்கறேன்."

ததாஸ்து!

"கம்ப்யூட்டர்ல தமிழ்ல எல்லாம் எழுதி பழக்கம் இருக்கா?" என்று ஆரம்பித்தேன்.

"ம்ஹூம். காலேஜ்ல ப்ராஜக்ட்க்கு மெட்டீரியல் கலெக்ட் பண்ணனும்னா என் ஃப்ரெண்ட் கூட போவேன். என் ஃப்ரெண்ட் தான் எடுத்துத் தருவா."

"ஓ, அப்போ அதிகமா ப்ரௌசிங்க் செண்டரே போறதில்லையா? சரி, ஈ-மெய்ல் ஐ.டி. என்னது?"

"இல்லை."

"ம்ம்ம், என்னது? ஈ-மெய்ல் அக்கௌண்ட்டே இல்லையா?"

"ம்ம்ஹூம். ஆமாம், ஈ-மெய்ல் எப்படி அனுப்பறது? எனக்கு அப்பறமா ஒரு அக்கௌண்ட் க்ரியேட் பண்ணித் தர முடியுமா?"

(க்ருபா, பொங்கி எழு! நல்லவேளை உனக்குத் தெரியாதது எதுவும் கேக்கலை.)

உடனடியாக யாஹூ ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்துக்குச் சென்றேன். படிவம் பூர்த்தி செய்யும் முன்னரே ஜாவாஸ்க்ரிப்ட் எரர். இந்த எரரை பலமுறை பார்த்து இருக்கிறேன். y_width ஆட்ரிப்யூட் undefined என்று திட்டும். ஃபயர்ஃபாக்சில் பிழைச்செய்தி காட்டாது. Refresh பண்ணி, டிஸ்கனெக்ட் பண்ணி, மீண்டும் அதே பக்கம் போய்... ம்ஹூம். ஒன்றும் கதைக்கே ஆகவில்லை. கிட்டத்திட்ட இருபதும் நிமிடங்கள் யாஹூவுக்கே போச்!

சரி போ. rediffmailக்குப் போய்ப்பார்ப்போம்.

ஒரு மாதிரி குத்துமதிப்பாக யூசர்நேம் பற்றி விளக்கினேன்.

"யூசர்நேம் உங்க பேர்லயே கிடைக்கறது ரொம்ப கஷ்டம். வேற எதாவது பேர்லதான் வரும்."

"என் பேரையே மொதல்ல போட்டுதான் பாப்போமே."

"சரி, பாஸ்வேர்ட்...?"

"ஷங்கர்."

எனக்குப் முதலில் அதன் பொருள் புரியவில்லை. பிறகுதான் சுதாரித்துகொண்டதும் சிரிப்பு வந்தது.

"ம்ம், நான் க்ருபாதான் பொதுவா. ஷங்கர்ன்னு அவ்வளவா யாரும் கூப்படறதில்லை. பரவாயில்லை, அதுவே இருக்கட்டும்."

சப்மிட் பண்ணியதும் "இந்தப் பேர்ல யூசர்நேம் கிடையாது" என்று நான் சொன்னதையே (எவ்வளவு தீர்க்கதரிசனம்!!!) யாஹூவும் சொன்னது.

"சரி, உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை உங்க பேர் பின்னாடியே சேர்த்துக்கலாம். உங்க அப்பா பேர், அம்மா பேர்....இல்லாட்டி புருஷன் பேர்." என்று விட்டு சிரித்தேன்.

அது ஜோக் இல்லை போலிருக்கிறது. அந்தப்பெண் 'க்ருபா'வே இருக்கட்டும் என்று வலியுறுத்த, அந்தப் பெயரிலேயே ஐ.டி. உருவாக்கிட்டோம்.

"சரி, இப்போ என்னோட யாஹு அக்கௌண்ட்ல இருந்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பறேன்." என்று விட்டு என் கணக்கிலிருந்து தமிழில் தட்டச்சடிக்க ஆரம்பித்தேன்.

"புடிச்சுருக்கா?" என்று மெதுவாக என்னருகில் அந்தப்பெண்ணின் குரல் கேட்டது.

(க்ருபா, அவ்வளவு சீக்கரம் சொல்லாத!)

"புடிச்சுருக்கே நல்லா! நான் எப்பவும் IEதான் யூஸ் பண்ணுவேன். ஃபயர்ஃபாக்ஸை விட இதுதான் ரொம்ப புடிக்கும்"

"என்னது?"

"ப்ரௌசர்தானே கேட்டீங்க?" என்றேன்.

"அது இல்லை."

"பின்ன எது?" என்றேன்.

(மனசு: 'என்னைப் புடிச்சு இருக்கா?'ன்னு கேட்டாதான் நேரிடையா பதில் சொல்வேனாக்கும்!)

எப்படி சொல்வது என்ற தயக்கத்தால் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

"ஓ, இந்த கம்ப்யூட்டரா. ஆமாம், ஆமாம். இது ரொம்ப புடிக்கும். புதுசு, செலரான். 2.4 கிகாஹெர்ட்ஸ்."

"அத கேக்கலை..." என்ற அதே டோனில் அதே குரல் இன்னும் பிசிறி.

ஐயோ பாவம்டா க்ருபா, ஏன் இப்படி விளையாடற? புடிச்சுருக்குங்கறதை சொல்லித் தொலையேன்.

"பின்ன எது?" என்றேன் விடாமல்.

பிறகு அந்த டாப்பிக் பக்கமே வரவில்லை.

இதற்கிடையில் பேசிக்கொண்டே யாஹுவிலிருந்து நான் அனுப்பிய மடல் ரெடிஃப்மெய்லுக்குள் வந்துவிட்டதா என்று பார்த்தேன். ம்ஹூம். என்ன கஷ்டகாலம்டா இது. சரி போ, என் குற்றம் இல்லை. யாஹூ குற்றம். ரெடிஃப் குற்றம்.

கிட்டத்திட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிவிட்டதால் வெளியில் களேபரம். அம்மா கதவைத் தட்டும் சத்தம். ஐயோ! இன்பாக்ஸ்ல ஈமெய்ல் வந்தா எப்படி இருக்குன்னு சீக்கரம் காமிக்கணுமே!

"நான் அப்பவே நெனச்சேன். நீ கம்ப்யூட்டர் முன்னாடிதான் ஒக்காந்துருப்பேன்னு. தனியாப்போய் பேசுடான்னு அனுப்பினா ரெண்டு மணிநேரமா கம்ப்யூட்டர் பத்திதான் பேசினயா? இன்னொரு நாள் பாத்துக்கோ அதையெல்லாம். ஏற்கனவே ரொம்ப இருட்டிப்போச்சு, நேரம் ஆச்சு களம்பணுமாம் எல்லாரும்."

அம்மா, இரு. ஈமெய்ல் இன்னும் வந்து சேரலை.

"இல்லம்மா, இரு ஒரே நிமிஷம்."

"இந்தா டிஃபன்." என்று சொல்லி அம்மா டிஃபன் தட்டை இருவருக்கும் கொடுத்ததும் செஷன் முடிவுக்கு வந்தது புரிந்தது.


* * * * ** * * * ** * * * ** * * * *

பெண்ணைப் பார்த்துப் பேசியகையோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். வழக்கம்போல் பணியகம் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது இன்னொரு புது ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.

நான் இந்த வாரம் முழுதும் எதையோ நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் எங்கள் பணியக க்ராஃபிக்ஸ் டிசைனர். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

க்ராஃபிக்ஸ் டிசைனர் முதல் முதலாக பொய் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

49 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

Very funny. I had a hearty laugh.
Thaks for sharing the story.

By: BalaGanesan "BG"

10:33 PM  
Anonymous Anonymous said...

//நான் எப்பவும் IEதான் யூஸ் பண்ணுவேன். ஃபயர்ஃபாக்ஸை விட இதுதான் ரொம்ப புடிக்கும்"//
ஃபயர்ஃபாக்ஸ் எதிர்ப்பு இயக்கமா அல்லது எடக்கு முடக்கு என்பதை சொல்லாமல் சொல்வதற்காகவா? ;-)

10:36 PM  
Anonymous Anonymous said...

// "ஓ, இந்த கம்ப்யூட்டரா. ஆமாம், ஆமாம். இது ரொம்ப புடிக்கும். புதுசு, செலரான். 2.4 கிகாஹெர்ட்ஸ்."
//

"இந்த டியூப்லைட்ட கண்ணாலம் பண்ணி நான் எப்பிடி கஷ்டபட போறேனோ"னு தோழியரிடம் புலம்பியதாக செய்தி!!!

By: Paandi

10:39 PM  
Anonymous Anonymous said...

:தலையாட்டுதல்:

க்ருபா,

நா வேணுன்னா கோடம்பாக்கம் போய் 'பிடிச்சிருக்காம்'னு சொல்லிட்டு வரட்டா?

சேச்சே! தேவையே இல்ல. அவ புத்திசாலி.னு ரவியா வந்து சொல்வார் பாரேன்.

-மதி

பி.கு.:

//அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ

புலம்பட்டே//

இதைத் தூக்கிரு!

By: Mathy Kandasamy

11:45 PM  
Anonymous Anonymous said...

இதைப் படிச்சவுடன், இதை எங்கேயோ கேட்ட மாதிரி, கனவுல வந்த மாதிரி இருந்தது. அப்புறம் யோசிச்சி பார்த்தப்புறம் , இதே மாதிரி எனக்கும் 21/2 வருடங்களுக்கு முன்னாடி நடந்தது ஞாபகம் வந்தது. ஆமாங்க! கல்யாணம் அகி 2/12 வருடம் ஆயிடுச்சு!!!

வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
சௌந்தர்.

By: சௌந்தர்.

12:04 AM  
Anonymous Anonymous said...

அட..அட..அட..என்ன ஒரு நேரேஷன். பொண்ணு ரொம்ப மோட்டிவேட் பண்ணிட்டாளா க்ருபா..??


By: மூக்கன்

1:58 AM  
Anonymous Anonymous said...

கூடிய சீக்கிரம் 'பேச்சிலரா'க வாழ்த்துக்கள்!!

//பெண்ணைப் பார்த்துப் பேசியகையோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன்.//

அடடா.. இதெல்லாம் நாங்க நம்பணும்னு எப்படிங்க எதிர்பார்க்கறீங்க? க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்லவேயில்லைன்னுதான் தோணுது :).

By: சரவணன்

4:58 AM  
Anonymous Anonymous said...

க்ருபா..
பொன்னியின் செல்வன் எல்லாம் ஒரு மேட்ட்ரா? நான் நிச்சயதார்த்தம் ஆன உடனே அவளுக்கு கொடுத்த மொதல் அஸைன்மென்ட்டே பொன்னியின் செல்வன், சிலவித்தியாசங்கள் படிக்க சொன்னதுதான். ஹனி மூன்லே குந்தவி பத்தியும் வீணை வித்வான் பத்தியும் பேசிகிட்டு இருந்தோம்.. ஆல் த பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

சுரேஷ்

9:32 AM  
Anonymous Anonymous said...

என்னவோ போ கண்ணா!! என்ன என்னவோ நடக்குது.. எல்லாம் தகவல் சொல்லிட்டுப் பண்ணுங்கப்பா..!! நல்லா இருங்கடே..

By: Meenaks

9:53 AM  
Anonymous Anonymous said...

சரி இப்போதைய நிலவரம் என்ன?

10:03 AM  
Anonymous Anonymous said...

1. //சரி, ஈ-மெய்ல் ஐ.டி. என்னது?"

"இல்லை."//
அதெல்லாம் ச்சும்மா..
அதுசரி..அனுப்பின மின்னஞ்சலில் அப்படி என்னதான் எழுதினிங்க? (கடவுளே..test என்று மட்டும் இருந்திருக்கக் கூடாது!!)
மின்னஞ்சல் inboxக்கு போச்சா இல்லையா?

2. //(மனசு: 'என்னைப் புடிச்சு இருக்கா?'ன்னு கேட்டாதான் நேரிடையா பதில் சொல்வேனாக்கும்!)

எப்படி சொல்வது என்ற தயக்கத்தால் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.//

க்ருபா..இந்த 2வது வரி இருக்கே...கிடைக்கும் வரை enjoy! :o) ஏனென்றால் இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் :knowing smile:

By: ஷ்ரேயா

11:46 AM  
Anonymous Anonymous said...

'தொடர்புடைய சுட்டிகள்'ல ஒன்னு க்ழண்டுக்க போகுதோ?

By: ராசா

12:38 PM  
Anonymous Anonymous said...

இந்த க்ராஃபிக்ஸ் டிசைனர்களே இப்படி தான். எப்பவும் பொய் தான் சொல்லுவாங்க. நான் உங்களை நம்புறேன் க்ருபா.

பாருங்களேன் அடுத்த முறை பார்க்கும் போதும் திரும்பியும் அதே பொய் சொல்வார். உங்க மத்த ஃப்ரென்ட்ஸும் இப்பல்லாம் அதிகமா பொய் சொல்வாங்களே? அதையெல்லாம் கண்டுக்கிடாதீங்க.

(Now listening to: தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லாருக்கும்... :) )

By: நவன் பகவதி

7:02 PM  
Anonymous Anonymous said...

அருமை கிருபா. இனிமையான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்.

By: செல்வராஜ்

11:38 PM  
Anonymous Anonymous said...

Good one buddy, as usual. BTW i have heard a lot abt ponniyin selvan and sivagami sabadam. I guess i should purchase it and give it a read when i goto india next time

MexicoMeat

9:18 PM  
Anonymous Anonymous said...

பாலகணேசன், நன்றி... உங்க கமனெட்க்கு மட்டும் இல்லை, உங்க

.NETExplorer வலைப்பதிவுக்கும்தான். :-) நல்லா இருக்கு. ஆனா ஏன்

அதிகமா அதுல போஸ்ட் பண்ண மாட்டேங்கறீங்க? தொடர்ந்து எழுதவும். .நெட்

பத்தி (குறிப்பா தமிழ்ல) ஏதும் வலைப்பதிவே இல்லையே... :-(

Anonymous, ஃபயர்ஃபாக்ஸ் உயபோகிக்காதது எடக்கு முடக்கா போச்சா. :-))

அனேகமாக எல்லா இண்ட்ராநெட் ப்ராஜக்டுக்கும் IE என்று spec/configலேயே

எழுதி வாங்கிவிடுவோம். IE நிறைய 'விட்டுக்குடுக்கும்', நிறைய வசதிகளும்

தரும். சோம்பேறித்தனம்தான். கண்டுக்காதீங்க... ;-)

பெண்வீட்டுலேர்ந்து சீரா பத்து ஃபிலிப்ஸ் ட்யூப்லைட் தராங்கலாம் பாண்டி. :-))

By: சு. க்ருபா ஷங்கர்

12:17 AM  
Anonymous Anonymous said...

மதி...!!! கோடம்பாக்கமா!!! அந்தப்பெண் இருக்கற இடம் உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்கயாவது ஒளறிட்டேனா? அப்பறம் கமெண்ட் செக்ஷன் மாத்தறதுக்கு நிறைய நாள் ஆகும் இன்னும். அடுத்த வர்ஷ வாக்குலதான். மேலும், சக பேச்சுலர்களும் பேச்சிலர்களா ஆகவேண்டாமாக்கும். :-)

சௌந்தர், மலரும் நினைவுகளா உங்களுக்கும்? அது சரி, 2.5 வருடங்கள் முன்னாடி நடந்ததை எங்கயாவது வலைப்பதிவுல போடலாம்ல? சரி, சரி. இப்போவும் ஒன்னும் மிஞ்சிப்போய்டலை. அதோட sequelயாவது போடுங்க, எனக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும். :-)

சுந்தர் (எ) மூக்கன்... மோட்டிவேஷன்? ஹீ, ஹீ. அதெல்லாம் தனிமடல் போட்டுதான் சொல்லணும். :-))By: சு. க்ருபா ஷங்கர்

12:45 AM  
Anonymous Anonymous said...

சரவணன், வாழ்த்தியடற்கு நன்றி. நான் சொல்றதை நம்புங்க. ஹரிசந்திரன், காந்தி, அப்பறம் அகரவரிசைப்படி க்ருபாதானாம் (தலைகீழா).


சுரேஷ், பொன்னியின்செல்வன் படிச்சா ஏதோ ஜாலியா இருக்கறதுன்னா என்னன்னு புரிஞ்சுக்கற ஒரு அளவுகோல்க்குதான். படிச்சதா சொல்லியிருந்தா அப்படியே கல்வெட்டு, சிற்பம், வரலாறுல எல்லாம் ஆர்வம் இருக்கான்னும் தெரிஞ்சுக்கலாம்.


மீனாக்ஸ், அதையேன் கேக்கறீங்க! எல்லாம் அவசராவசரமா நடந்தது. காத்தால பாக்கறதுன்னு முடிவு பண்ணி, போன் பண்ணி சொல்லி அப்பறம் ராத்திரி வழியற முகத்தோட அப்படியே வந்து பாத்தேன் (எண்ணெய்தான்). அநானிமஸ், இப்போதைய நிலவரம் அப்போதேதான். என்ன, மூணுதடவை ஃபோன்ல மட்டும் பேசினோம். ;-)


By: சு. க்ருபா ஷங்கர்

12:46 AM  
Anonymous Anonymous said...

ஷ்ரேயா, testங்கறது இங்க்லீஷ் வார்த்தையாச்சே! "வணக்கம், டெஸ்ட்"ன்னு அனுப்பினேன். :-)) ம்ம், எவ்ளோ பெரிய வாழ்க்கைல களாய்க்க அப்பப்போ ஏதாவது மேட்டர் கிடைக்காமலா போய்டும். சிரிச்சுட்டா போச்சு.

ராசா, தொடர்புடைய சுட்டிகள்ல எனக்கு முன்னடி ஒன்னுரெண்டு கழண்டாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை. ;-)


நவன், நாளைக்கு பணியகம் போனப்பறம் க்ராஃபிக்ஸ் டிசைனர் என்ன சொல்றார்ன்னு பார்க்கறேன். ஆமாம், சில ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் பொய் சொல்ல ஆரம்பிக்கறாங்க. சித்ரகுப்தன் எண்ணெய்ல போட்டு நல்ல வறுக்கப்போறான். அப்பறம் அது என்னது அது "Now listening to:"? ஆங்கில காமடி சீரியல் ஏதாவது தொலைக்காட்சியில் ஓடுகிறதா?

செல்வராஜ், அவ்வாறே அமைந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டாலும் நன்றி. :-)


By: சு. க்ருபா ஷங்கர்

12:48 AM  
Anonymous Anonymous said...

மெக்ஸிகோமீட், டாங்சுபா. அப்பாலிக்கா, இந்தியா வரும்போது பொன்னியின்செல்வன் வாங்கணும்னு இல்லை, படிக்கணும்னா இப்போவே இந்த சுட்டிக்குப் போனா போதும்.
http://www.chennainetwork.com/a/ebooks/ponniyinselvan.html

படிச்சுப் பார்த்து என்ன்ன்ன்ன்ன்சாய்ய்ய்ய்ய் பண்ணிட்டு சொல்லுபா, வாழ்க்கையே இன்னும் செம கலீஜா மாறிடும்.

By: சு. க்ருபா ஷங்கர்

12:54 AM  
Anonymous Anonymous said...

Very funny da ! Had a hearty laugh !!

1:30 PM  
Anonymous Anonymous said...

கிச்சா ! ரொம்ப நாளுக்கு அப்புறம் உருப்படியா எழுதியிருக்க ! பொறுப்பு வந்திட்டதோ !! :))

நவின வந்தியத்தேவன் - குந்தவை டயலாக் மாதிரி இருந்தது.. ஆனா பைய்யா ! கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாம் இந்த மாதிரி எல்லாம் "நடிச்சால்" சரியான "டுயூப் லைட்" (அ) "டிகிரி படிச்சு எழுதித்தான் வாங்கினியா ?" என்று கமண்ட் தான் வரும். pince sans rire ஜோக் (deadpan/expressionless ஜோக்) எல்லாம் பண்ணி அவங்களுக்கு புரியா விட்டா உன்னைதான் "மாமியார் ஊருக்கு" (அதுதான் கீழ்பாக்கம்) அனுப்புவாங்க !!!

ஒன்னு சொல்லுரேன் தம்பி ! பொன்னியின் செல்வன் அவுங்க படிக்கிறாங்களோ இல்லையோ நீ தான் சீரியல்கள் பார்ப்ப ( பேச விஷயம் வேணுமே !!! )

--அனுபவ பட்ட ரவியா

By: ரவியா

6:29 PM  
Anonymous Anonymous said...

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

ஜெய்லுக்குப் போனப்பறம், சாரி... கல்யாணம் ஆனப்பறம் deadpan/expressionlessஆ நான் இருக்கறதே ஜோக்காதான இருக்கும். ;-)

மற்றபடி நான் டி.வி. சீரியல்கள் இப்போ பார்க்க ஆரம்பிச்சதுக்கும் நீங்க சொன்னதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்றூ ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஆனர்!

By: சு. க்ருபா ஷங்கர்

By: சு. க்ருபா ஷங்கர்

By: சு. க்ருபா ஷங்கர்

9:13 PM  
Anonymous Anonymous said...

வாய்யா க்ருபா,

வருங்கால மாப்பிள்ளைகள் சங்கத்துக்கு வருக! வருக! வருக! (ஹூம்... இனிமே பேச்சிலர் தான்!)

எப்ப கல்யாணம் ?

By: கோபி

10:32 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்

8:06 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் க்ருபா. சந்தேகம், நிசமா நடந்துதா என்ன இதெல்லாம்? பின்னாடி ஒரு நாள் வசமா மாட்டிட்டு முழிக்க போறீங்க பாத்து.

12:51 PM  
Anonymous Anonymous said...

பிரமாதம்........பிரமாதம்......

5:30 PM  
Anonymous Anonymous said...

12.51PM வாழ்த்தின அனானிமஸ் நான் தான்! இது ஏன் என் பேர முழுங்கிருச்சுன்னு தெரியலையே!
உமா

By: Uma

12:59 PM  
Anonymous Anonymous said...

பிரமாதம் பிரமாதம்னு ரெண்டு வாட்டி சொன்ன அனானிமஸ் நாந்தான். எம்பேரையும் காணோமே

2:45 PM  
Blogger G.Ragavan said...

அட! இப்பவும் காணம். நாந்தான் இராகவன்.

2:45 PM  
Anonymous Anonymous said...

கோபி, நீங்கதான் ரொம்ப நாளா பெண்டிங் லிஸ்ட்ல இருக்கீங்க போலருக்கு. நடுநடுல மாமாப்பொண்ணப்பத்தி பேச்சு வரர்தோட சரி.

உமா, நெஜம்ம்ம்ம்ம்மோ நெஜம். ஆனா தைரியமா நான் இங்க போட்டதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுக்கு நெட் எல்லாம் பரிச்சயம் இல்லையாம். அதனால வீட்டுல எலி நெட்டுல புலின்னு இருக்கலாம் (கொஞ்ச காலத்துக்காவது).

ராகவன், நன்றி. இப்போ வந்தாச்சா? 'என் விவரம் கீழே'வை டிக் பண்ணினாதான் பேர் வர மாதிரி செட் பண்ணி இருக்கு.

By: சு. க்ருபா ஷங்கர்

3:52 PM  
Anonymous Anonymous said...

க்ருபா கண்ணாலம் எப்போ?

பி.கு. :- உங்க வலைபதிவுல இருக்க புலம்பல் பெட்டிய விட இது நல்லா இருக்கு :)

By: Uma

6:43 PM  
Anonymous Anonymous said...

Nice one dude!

10:14 PM  
Anonymous Anonymous said...

அருமை கிருபா.. அந்த பெண்ணோட பிளாக்கில் பாத்திங்களா என்ன எழுதிருக்குனு ? வகையா ஏமாந்துடிங்களே..

நீங்க தான் ரொம்ப வழிஞ்சதா சொல்லிருக்கு அந்த பொண்ணு..

3:01 AM  
Anonymous Anonymous said...

இது கூட நல்லா இருக்கே!

3:11 PM  
Anonymous Anonymous said...

முதன்முறை பேசினப்போ பொன்னியின் செல்வன், தமிழ் தட்டச்சு, மின்னஞ்சல். உம்மையெல்லாம் சுண்ணாம்பு காலவாய்லே வச்சி சுடணும்.

எங்க ஆத்துக்காரர் பெரிய கம்பிபீட்டருன்னு அந்தப் பொண்ணு ஊரெல்லாம் சொல்லணும்ன்னு ஆசப்பட்டீங்களா?

6:02 PM  
Anonymous Anonymous said...

பெரிசா அடிச்சேன், கடைசில எல்லாமே காணம போச்சு :-(

நம்ம ஆசையை அந்த பொண்ணுகிட்ட திணிக்கப்பாத்தோமே, அந்த பொண்ணு ஆசை என்னனு கேட்டீங்களா க்ருபா ?!By: செந்தில்

9:54 AM  
Blogger யாத்திரீகன் said...

என் தமிழ்த்தளத்திலும், தமிழில் பின்னூட்டம் இடுவதற்கு டெம்ப்ளேட்-ஐ தொட்டேன், சொதப்பிவிட்டது, உங்கள், தளத்தில் உபயோகத்தில் உள்ள கோட்-ஐ சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா க்ருபா ?

9:56 AM  
Anonymous Anonymous said...

ஆஹா, எல்லாம் இப்படி அனானிமஸ்லயே போட்டு இருக்கீங்களே. எப்படி குறிப்பிட்டு எல்லாருக்கும் பதில் சொல்றது. :-(

இருந்தாலும், அனானி... கல்யாணம் ஆனப்பறமே சுண்ணாம்புக்கால்வாய்தான்னு சில அனுபவசாலிகள் சொல்கிறார்கள்.

இன்னொரு அனானி, அந்த ப்ளாகில் நானும் பார்த்தேன். நான் வழிஞ்சதா சொன்ன மாதிரியா இருக்கு. வந்து, ரொம்ப "அறிவு பூர்வமா" பேசின மாதிரில்ல இருக்கு?

செந்தில், மொதல்ல அந்த பொண்ணோட மேட்டரை எல்லாம் கேட்டுட்டுதான் என் பக்கமே வந்தேன். அந்தப்பொண்ணுக்கு ரெண்டே ரெண்டு ஹாபிதானாம். அது வந்து... ம்ஹும். இங்க வேணாம். :-)


உமாவும் என் ப்ளாக்ல இருக்கறதுக்கு இதுவே தேவலைன்னு சொல்லிட்டாங்க. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு டெம்ப்ளேட் அனுப்பி வைக்கட்டுமா செந்தில்?


By: சு. க்ருபா ஷங்கர்

10:57 AM  
Anonymous Anonymous said...

கட்டாயம்.. அனுப்புங்கள் க்ருபா..

By: செந்தில்

7:29 AM  
Anonymous Anonymous said...

எனக்கும் அனுப்புங்கள் க்ருபா..

By: nandhan

11:36 AM  
Anonymous Anonymous said...

உங்க ரெண்டு பேர் ப்ளாக்ளயும் தேடித் தேடிப் பார்த்தேன். எங்க ஈமெய்ல் இருக்குன்னே கண்டு புடிக்க முடியலை. :-((

ஈ-'மயில்' ஐ-டி அனுப்பி வைக்கவும்.

By: சு. க்ருபா ஷங்கர்

11:06 AM  
Anonymous Anonymous said...

Profileல இருக்கே.

By: நந்தன்

5:25 PM  
Anonymous Anonymous said...

அப்படியே நம்ம வலைத்தளம் http://kolkataprince.blogspot.com வரைக்கும் வந்தா.. மின்னஞ்சல் முகவரியுடன் (kolkataprince@gmail.com), இலவசமாக... கொஞ்சம் வலைப்பூக்களும் கிடக்கும் கிருபா..

(ஹி ஹி ஹி.. ஒரு.. விளம்பரம் தான்... ;-)

By: செந்தில்

9:54 PM  
Blogger யாத்திரீகன் said...

உங்க புலம்பல் பெட்டிக்கு, என்னிடம் ஏதாவது கோபமா... என்னை அனானிமஸ் என்றே சொல்கின்றதே..

9:57 PM  
Anonymous Anonymous said...

நந்தன் & செந்தில், மின்னஞ்சல்ல மேல்கைண்ட் டெம்ப்ளேட் அனுப்பி இருக்கேன். பார்த்துக்கோங்க. அதோட, கீழ்க்காணும் இந்த லின்க்ஸ்ல போய்ப் பார்த்தீங்கன்னா, இன்னும் விளக்கமாப் புரியும்:

ஆரம்பம்: http://www4.brinkster.com/shankarkrupa/blog/default.asp?entryID=27
செப்பனிடல்: http://kosappettai.blogspot.com/2004/09/blog-post_13.html
வளர்ச்சி: http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_14.html
நிறைவு: http://www.suratha.com/bcode.htm

பெயர், சுட்டிகளை குக்கீ வழியாக நினைவில் வைக்கு வசதிக்கு:
http://malekind.blogspot.com/2004/12/blog-post_18.html
ஆப்பறம், "என் விவரம் கீழே" செக்பாக்ஸை டிக் பண்ணலையா செந்தில் பின்னூட்டம் இடும் போது?

By: சு. க்ருபா ஷங்கர்

1:45 PM  
Anonymous Anonymous said...

>>> "என் விவரம் கீழே" செக்பாக்ஸை டிக் பண்ணலையா செந்தில் பின்னூட்டம் >>> இடும் போது?

பண்ணியிருந்தேன்.. இருந்தும்.. என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை... ஹீம்...


By: செந்தில்

8:08 AM  
Blogger யாத்திரீகன் said...

நன்றி.. க்ருபா... ,

இப்போ நான் இட்ட பின்னூட்டமும் அப்படித்தான் ஆகிடிச்சு.. மேலும்.. உங்க பின்னூட்டத்தையே பாருங்க.. ;-) , பெரிய விஷயமில்லை.. இருந்தாலும் டவுட் இருந்தது.. அதான் கேட்டேன்..

8:10 AM  
Anonymous Anonymous said...

இல்ல செந்தில், மேல பேர் அநானிமஸ்னுதான் வரும். கீழதான் "பை"னு போட்டு பேரு இருக்கும். இல்லாட்டி டிக் மார்க் எடுத்து விட்டுட்டா ப்ளாகர்-ல லாக்-இன் பண்ணின பேர் வரும் [வரணும் :-( ]

By: சு. க்ருபா ஷங்கர்

3:11 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ