Saturday, December 11, 2004

குட்டிச்சுவர் சிந்தனை 'முத்துக்கள்'

விருப்புவெறுப்பு ஏதுமின்றி வெளியிடப்படும் ஒரு ஆராய்ச்சி முடி: (ஹீ, ஹீ, ஆராய்ச்சி முடிவுல மட்டும்தான் விருப்புவெறுப்பு இல்லை, ஆராய்ச்சில அதெல்லாம் இருக்கும்)


1) 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்பது சிவாஜிக்கு சொல்லப்பட்ட வசனம்.
2) பேருந்தில் நிறைய பெண்கள் என்னைத் திட்டித்திட்டி பொங்கி எழுகிறார்கள்
3) எனவே நிறைய பெண்கள் சிவாஜி ரசிகர்கள்



1) ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.
2) பல போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி கிடைக்கிறது
3) எனவே பின்னாலிருக்கும் பெண் ஒரு போராட்டம்



1) வீட்டில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்குவது தொழில் முன்னேற்றத்தைப் பெருக்கும்-வாஸ்து சாஸ்திரம்
2) நம் பணியகத்தை நம் சொந்த வீடு போல் மதிக்க வேண்டும்
3) எனவே பணியகத்தில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்கலாம்



1) எனக்கு குடியரசுத்தலைவரின் அறிவுரைகள் பிடிக்கும்.
2) 'கனவு காணுங்கள்'-குடியரசுத்தலைவர்
3) ஒரு மனதுக்குப் பிடித்த ஸ்பெஷல் "அவங்க" என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கடந்தார்கள்

10 comments:

Anonymous said...

க்ருபா,
ரெண்டாவது ஆராய்ச்சியில ஏதோ தப்பு இருக்கே.
வெற்றிக்குப் பின்னால பொண்ணு. போராட்டத்துக்குப் பின்னால வெற்றி. அப்போ, வெற்றிக்கு முன்னால இருக்கிற பொண்ணு(?)தான போராட்டம்? :-)
ஆராய்ச்சி முடிவிலயும், விருப்பு .. இல்ல வெறுப்பு புகுந்துட்ட மாதிரி இருக்கே!

By: vidyas

Anonymous said...

பெண் என்னும் மாய பிசாசைப் பற்றிய ஆராய்ச்சி எல்லாம் நல்லாதான் இருக்கு,
அப்புறம் " அவுங்க சிரிச்சிட்டு" போனாங்கன்னா என்ன அர்த்தம்?

By: usha

Anonymous said...

வெற்றிக் கண்ட ஒவ்வொரு ஆணுக்குப் பின்னல் ஒரு பெண் திகைப்புடன் நிற்கிறாள் (இதுக்கு இவ்வளவு அறிவு இருக்கா?)
அன்புடன்,
ராகவன்

By: Dondu

ரவியா said...

அங்கலாய்த்த பேச்சுலர் வைத்து தான் தலைப்பு வைப்பீங்களா? குட்டிச்சுவர் என்ன வசிக்குமிடமா?

Anonymous said...

//வெற்றிக் கண்ட ஒவ்வொரு ஆணுக்குப் பின்னல் ஒரு பெண் திகைப்புடன் நிற்கிறாள் (இதுக்கு இவ்வளவு அறிவு இருக்கா?) //

ஹி..ஹி.. கலக்கல்

(பின்னால யாரோ மொறச்சிகிட்டே நிக்கிற மாதிரி தெரியுது.. ஆ!! தர்ம அடி விழுதே!! காப்பத்துங்க.... காப்பத்துங்க...)

By: கோபி

Anonymous said...

வித்யா, ம்கூம், இல்லை. வெற்றிக்கு பின்னாடின்னு இல்லை. நமக்குப் பின்னாடி இருக்கறதுதான் கணக்கு. ஓ, சாரி சாரி. எங்களுக்குப் பின்னாடி இருக்கறதுதான் கணக்கு.

உஷா, மீனாக்ஸோட முந்தினநாள் பதிவு பார்க்கலையா, அந்த ஃபேஷியல் ப்ளீச்சிங்? "அவங்க சிரிச்சிட்டுப் போனாங்கன்னா"வை இங்க க்ளிக் பண்ணினா அவர் சொன்ன பதிவுக்குப் போகும்.

கோபி, கரெக்ட், கரக்ட்!. கடைச்ச தர்ம அடில "Dondu" dont doable (repairable?)ஆகாம இருந்தா சரி. :-))

By: S Krupa Shankar

Anonymous said...

ரவி(யா), என்ன பண்றது, எல்லாம் புலம்பல்ஸா போச்சே, அப்பறம் அங்கலாய்க்காம என்ன பண்றது. விமங்கைன்ட்-ல புரட்சின்னா மேல்கைன்ட்-ல அங்கலாய்ப்புல என்ன தப்புங்கறேன்! குட்டிச்சுவர்ன்னா...வந்து, 'பாய்ஸ்'ல கூட வருமே. வசிக்குமிடம், அதைவிட வெட்டிக்கதை பேசுமிடம்.

By: S Krupa Shankar

Anonymous said...

க்ருபா, தப்பே இல்லை. நமக்குப் பின்னாடின்னே சொல்லலாம். என்னோட முழுப் பேரு வித்யாசாகரன். தேவையில்லாம எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டிருந்தா மன்னிச்சுக்கங்க! :-)
இனி முழுப் பேரையும் போட்டுடறேன்.

By: vidyas

Anonymous said...

என்னடா இது தமிழ்நாடா இல்லை இங்கிலாந்தானே தெரியவில்லை...
சென்னை பல்கலைக்கழகம் என்ன செய்தது ஆட்சியாளர்களை......................
அய்யோ இது கொடுமையடா இந்த பெயர் மாற்ற அறிவிப்பு...
உங்கள்
திருநிலவன்
பட்டுக்கோட்டை

By: Thirunilavan

Anonymous said...

என்னடா இது தமிழ்நாடா இல்லை இங்கிலாந்தானே தெரியவில்லை...
சென்னை பல்கலைக்கழகம் என்ன செய்தது ஆட்சியாளர்களை......................
அய்யோ இது கொடுமையடா இந்த பெயர் மாற்ற அறிவிப்பு...
உங்கள்
திருநிலவன்
பட்டுக்கோட்டை

By: Thirunilavan

By: Thirunilavan