அவர்கள் சிரிக்க இவர்கள் சிந்திக்க

"டேட்டா எண்ட்ரி பண்ற பொண்ணுகிட்ட காதல் கடுதாசி குடுத்தது தப்பாப் போச்சு."


"ஏன், என்ன ஆச்சு?""என் டேபிள்ல மௌசுக்கும், மனசுல ஒனக்கும் இடம் கிடையாதுன்னு ஒரே போடா போட்டுட்டா"
"கார்த்தால எல்லாம் நான் சமையல் வேலையை கவனிக்கறதே இல்லை. கால் மேல கால் போட்டு செம தூக்கம் தூங்குவேன்"


"அட பரவாயில்லயே! உங்க மனைவி ஒன்னும் சொல்மாட்டாங்க?"


"ச்சே, ச்சே. நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு வந்து களைப்பா இருப்பேன்னு அவளுக்கு புரியும். சாயங்காலத்துக்குள்ளயாவது சமைச்சு முடிக்காட்டிதான் திட்டுவா"
"'படிதாண்டா பத்தினி'னு அவர் சொன்னப்ப எனக்கு மொதல்ல புரியலை."


"அப்பறம்?"


"தெனமும் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கி வாசல் படிதாண்டா கதின்னு கிடப்பார்ன்னு போய்ப் பார்த்தப்பதான் புரிஞ்சது""அந்த மகளிர் சங்கத் தலைவி ஏன் ரொம்ப அப்செட்டா இருக்காங்க?""அதுவா, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்னு தன் வாயாலேயே மேடைல ஒத்துக்க வேண்டியதாப் போச்சாம்"
கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்


கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?


மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 மறுமொழிகள்:

Blogger Jsri said...

க்ரு, கட்டம் கட்டிக் கலக்கியிருக்கீங்க. ஆனா முதல் கட்டம் தவிர மத்த எதுவும் எனக்கு பிரில்லியண்டா தெரியலை. மத்ததெல்லாம் பல காலமா பல தடவை கேட்டதுதான். குறையா சொல்லலை; இன்னும் அதிகமா உங்ககிட்ட எதிர்பார்த்தேன்னு சொல்ல வந்தேன். [இணையத்துல டிஸ்க்ளெய்மர் போட்டே நொந்துட்டேன். :(]

5:57 AM  
Anonymous Anonymous said...

ஆளு ஆளுக்கு எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறீங்க, இப்படியே போனா கல்யாணமே ஆகாதுன்னு சாபம் விட்டுடுவோம்.
இப்படிக்கு,
செயலாளர்,
தேசிய மகளிர் இயக்கம்

By: ...

11:25 AM  
Anonymous Anonymous said...

ஜெயஸ்ர், ஒரு கட்டமாவது கடந்தா மாதிரி இருந்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி. அது சரி, [பல காலமா கேட்டாலும்] யதார்த்த எழுத்து இலக்கியம் உங்களுக்குப் புடிக்காதா? ;-) [நான் கூட] இணையத்துல டிஸ்க்ளெய்மர் போட்டே நொந்துட்டேன்:-( Anonymous,
தேவை நிரைவேறாத சாபம் நிரந்தரம்
தேவி கிடைக்காத சாபம் வரம் :-)

By: சு. க்ருபா ஷங்கர்

8:41 PM  
Blogger Jsri said...

யாரு சொன்னது எனக்குப் பிடிக்காதுன்னு. அது ஒண்ணுதான் எனக்குப் புரியும். ஆனா படிச்சதையே திரும்பத் திரும்ப படிக்கமுடியுமா? யதார்த்தத்த்துலயே புதுசு புதுசா கலக்க உங்களால முடியும். ஆனா இந்தப் பதிவுல நீங்க அதைச் செய்யலை. அதே நான் சொன்னது. அது போகட்டும், 4 வரி அடிக்கறதுக்குள்ள இவ்ளோ தட்டுப் பிழைதான் செய்யமுடியுமா? என்னவோ போங்க.

7:49 AM  
Anonymous Anonymous said...

க்ருபா, அந்த Anonymous வேற யாரும் இல்லை, உஷா தான். அவங்க தர்ற சாபம் எல்லாம் பலிக்காது, கவலைப்படாதே.

By: Meenaks

11:31 AM  
Anonymous Anonymous said...

Jayashri, மொதல்ல ஒரு டம்ப்ளர் கரும்பு ஜூஸ் ப்ளீஸ்!

நான் யதார்த்த இலக்கிய எழுத்துக்கள்னு சொன்னது ஆண்களின் (எல்லா மேல்Kind உறுப்பினர், உறுப்பினரல்லாதவர்களும் வழியும் கண்ணீரைத் கொள்கின்றனர்) அவல நிலையை அப்டீன்னு சொன்னேன்னு நீங்க நெனச்சாலும் அது உண்மைதான் என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில் இலக்கிய நோக்கில் கூறப்பட்ட விமர்சனம் இது இல்லை என்பதை தெரிவித்து விடவும் விரும்புகிறேன் என்பதை பயபக்தியுடன் தெரிவிக்க நான் விரும்பினால் இவ்வாக்கியத்திற்கு டிஸ்க்ளெய்மர் போடணுமா, கூடாதா? :-((

அப்பறம் எழுத்துப்பிழைல்லாம் ரெண்டு வரில அவ்வளவுதான் என்னால முடிஞ்சது. பெருசா எழுதினாதான் நிரைய வரும். :-(

வந்து, மீனாக்ஸ்,
உஷாங்கற பேர்ல இப்போ எல்லாம் சைன் ஆஃப் பண்ணி யாருமே எழுதறதில்லை போலருக்கு? ;-)

By: S Krupa Shankar

9:26 PM  
Anonymous Anonymous said...

«Ð측¸ò¾¡ý "¿¢¨ÃÂ" எழுதìܼ¡Ð

By: ľ¡

12:25 AM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ