Wednesday, September 07, 2005

பேட்டைப் பிள்ளையாரும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

பேச்சுலர் சங்கத்தின் சீனியர் உறுப்பினர் பிள்ளையாருக்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் பிள்ளையார் வாங்கி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு இந்தியத் தலைநகருக்குச் சென்று விட்டதால் நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (வீட்டுலதான்) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

சென்னையின் அருந்தலமாம் சைதைத் திருத்தலத்தில் இந்த ஆண்டு களிமண்ணில் பண்ணிய பிள்ளையார் சிலையின் விலை ரூ. 15. என் அப்பா வழித் தாத்தாவுக்கு களி மண்ணில் பிள்ளையார் பிடிக்கத் தெரியும். எனக்குத் தெரியாது, களிமண் சுமந்திருந்தும் என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'கஜகர்ணிகாய நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை, "பேச்சுலரா பொறந்து பேச்சுலராவே வாழறியேப்பா இன்னமும்...".



பிள்ளையாருக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் பிள்ளையாருக்குப் பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா பிள்ளையார்! பாவம். ப்ரோக்ராமருக்கு பணியகம் மாதிரி, பிள்ளையாருக்கு பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் மக்கள்ஸ்? இருந்தாலும் என்னே உன் கருணை!

'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா கணேசா?

அடுத்த ஆண்டு தம்பதி சமேதராகப் பிறந்தநாள் கொண்டாட சக பேச்சுலரை மேல்Kind «í¸ò¾¢É÷¸û வாழ்த்தி வணங்குகிறோம்.

Friday, April 29, 2005

கதை, திரைக்கதை, வசனம்
-இறைவன்

  • எங்கள் பணியகத்து க்ராஃபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்றால் யாராலாவது நம்ப முடியுமா?
  • யாஹுவிலிருந்து ரெடிஃப் மெய்லுக்கு கடிதம் வந்து சேர ஏன் தாமதம் ஆகிறது?


* * * * ** * * * ** * * * ** * * * *

"இதான் என்னோட கணிப்பொறி." என்ற வரிதான் நான் அந்தப்பெண்ணுடன் முதல் முதலாகப் பேசிய வரி.

பெண்பார்க்கப்போனப்போ கூட 'தனியா பேசிட்டு வாங்க' என்றதும் 'என்ன, எல்லாரும் நிறைய சீரியல் பாப்பேளாக்கும்?' என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.

ஆனால் திங்கட்கிழமை மறுபடியும் வீட்டிற்கு குடும்ப சகிதமாக எல்லோரும் வந்திருந்தனர். பிறகு நான், அந்தப்பெண், மற்றும் என் கம்ப்யூட்டர் மட்டும் ஒரு தனி அறையில். அப்போதான் 'இதுதான் என்னோட கணிப்பொறி.'

"பொன்னியின்செல்வன் படிச்சாச்சா?"

"கேள்விப்பட்டு இருக்கேன்."

அப்போ படிச்சதில்லை! ஆஹா! போச், போச்!

"அப்போ வேற எந்த கத புக்கும் கூட படிச்சதே இல்லையா?" என்று ஆவலுடன் கேட்டேன்.


"ம்ஹூம். டி.வி.தான் பார்ப்பேன். நிறைய சீரியல்ஸ் பாப்பேன்."

வந்தியத்தேவன் புடிக்குமா, சேந்தன் அமுதன் புடிக்குமான்னு தெனமும் பேசிப்பேசி சந்தோஷப்படலாம்னு நெனச்சேன். அருள்மொழிவர்மன் யானையோட காதுல என்னமோ சொல்லி யானை வேகமா போனது, அந்தக்காலத்துலயே கல்கிக்கு ரஜினி பத்தி ஐடியா இருந்துருக்குன்னு சொல்லலாம்னு நெனச்சேன். ஆழ்வார்க்கடியான் என்ன ஒரு புத்திசாலி! வந்தியத்தேவன் ரவிதாசன் என்கௌண்டர் நெனச்சு நெனச்சு பார்த்து என்ஜாய் பண்ணலாம். "நீங்கள் இந்த வாளைப்பற்றி கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது" டயலாக் என்ன ஒரு டயலாக்! அப்பறம் வந்தியத்தேவன் போன எடத்துக்கெல்லாம் போய்ட்டு வரலாம் நாமளும். பூங்குழலி புடிச்சா கோடியக்கரைப்பக்கமா போகலாம். குந்தவை புடிச்சா பழையாறைக்கும் போய்ட்டு வரலாம். ரெண்டும் புடிச்சிருந்தா பெரியகோயில்ல போய் கல்வெட்டு படிக்க் கத்துக்கலாம். "கொடுத்தார் கொடுத்தனவும்" கல்வெட்டு எங்க இருக்குன்னு பார்கலாம்.

சரி வுடு. ஜெயமோகன், சுந்தரராமசாமி என்று எல்லாம் என்னைப்போலவே இந்தப்பெண்ணுக்கும் ஒன்றும் புரியாது.

"நமக்கு கல்யாணம் ஓக்கே ஆனாலும் எப்படியும் நிறைய நாள் இருக்கு இல்லையா? கண்டிப்பா பொன்னியின் செல்வன் படிங்க, ப்ளீஸ். நானே வாங்கித் தரட்டுமா?" என்றேன்.

"ம். சரி. புக் வாங்கி அனுப்புங்க. உள்ள உங்க ஃபுல்சைஸ் ஃபோட்டோ ஒன்னு வெச்சு..."

புத்தகவாசமே கிடையாதாம். மிச்ச விஷயத்துக்கெல்லாம் போகலாம்.

"என்கிட்ட நீங்க எதாவது கேக்கணுமா? நானே ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கேன்." என்றேன்.

"ம்ம். கல்யாணம் ஆனப்பறம் காலேஜ்க்கு எதுல போறது?"

"ட்ரெய்ன் இருக்கே..."

"ம்ஹூம். நீங்க கொண்டு விட முடியுமா, ப்ளீஸ்."

"சரி, எத்தனை மணிக்கு காத்தால?"

"ஒரு 7:30, 7:45க்கு களம்பினா போதும்."

"ஆ, அப்போ கொறைஞ்சது 7:00 மணிக்காவது எழுந்துக்கணுமா! எனக்கு 7:00 மணி எல்லாம் நடுராத்தி மாதிரி.... "

"கொஞ்ச நாளைக்கு மட்டும். அப்பறம் பழகினப்பறம் நானே போய்க்கறேன்."

ததாஸ்து!

"கம்ப்யூட்டர்ல தமிழ்ல எல்லாம் எழுதி பழக்கம் இருக்கா?" என்று ஆரம்பித்தேன்.

"ம்ஹூம். காலேஜ்ல ப்ராஜக்ட்க்கு மெட்டீரியல் கலெக்ட் பண்ணனும்னா என் ஃப்ரெண்ட் கூட போவேன். என் ஃப்ரெண்ட் தான் எடுத்துத் தருவா."

"ஓ, அப்போ அதிகமா ப்ரௌசிங்க் செண்டரே போறதில்லையா? சரி, ஈ-மெய்ல் ஐ.டி. என்னது?"

"இல்லை."

"ம்ம்ம், என்னது? ஈ-மெய்ல் அக்கௌண்ட்டே இல்லையா?"

"ம்ம்ஹூம். ஆமாம், ஈ-மெய்ல் எப்படி அனுப்பறது? எனக்கு அப்பறமா ஒரு அக்கௌண்ட் க்ரியேட் பண்ணித் தர முடியுமா?"

(க்ருபா, பொங்கி எழு! நல்லவேளை உனக்குத் தெரியாதது எதுவும் கேக்கலை.)

உடனடியாக யாஹூ ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்துக்குச் சென்றேன். படிவம் பூர்த்தி செய்யும் முன்னரே ஜாவாஸ்க்ரிப்ட் எரர். இந்த எரரை பலமுறை பார்த்து இருக்கிறேன். y_width ஆட்ரிப்யூட் undefined என்று திட்டும். ஃபயர்ஃபாக்சில் பிழைச்செய்தி காட்டாது. Refresh பண்ணி, டிஸ்கனெக்ட் பண்ணி, மீண்டும் அதே பக்கம் போய்... ம்ஹூம். ஒன்றும் கதைக்கே ஆகவில்லை. கிட்டத்திட்ட இருபதும் நிமிடங்கள் யாஹூவுக்கே போச்!

சரி போ. rediffmailக்குப் போய்ப்பார்ப்போம்.

ஒரு மாதிரி குத்துமதிப்பாக யூசர்நேம் பற்றி விளக்கினேன்.

"யூசர்நேம் உங்க பேர்லயே கிடைக்கறது ரொம்ப கஷ்டம். வேற எதாவது பேர்லதான் வரும்."

"என் பேரையே மொதல்ல போட்டுதான் பாப்போமே."

"சரி, பாஸ்வேர்ட்...?"

"ஷங்கர்."

எனக்குப் முதலில் அதன் பொருள் புரியவில்லை. பிறகுதான் சுதாரித்துகொண்டதும் சிரிப்பு வந்தது.

"ம்ம், நான் க்ருபாதான் பொதுவா. ஷங்கர்ன்னு அவ்வளவா யாரும் கூப்படறதில்லை. பரவாயில்லை, அதுவே இருக்கட்டும்."

சப்மிட் பண்ணியதும் "இந்தப் பேர்ல யூசர்நேம் கிடையாது" என்று நான் சொன்னதையே (எவ்வளவு தீர்க்கதரிசனம்!!!) யாஹூவும் சொன்னது.

"சரி, உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை உங்க பேர் பின்னாடியே சேர்த்துக்கலாம். உங்க அப்பா பேர், அம்மா பேர்....இல்லாட்டி புருஷன் பேர்." என்று விட்டு சிரித்தேன்.

அது ஜோக் இல்லை போலிருக்கிறது. அந்தப்பெண் 'க்ருபா'வே இருக்கட்டும் என்று வலியுறுத்த, அந்தப் பெயரிலேயே ஐ.டி. உருவாக்கிட்டோம்.

"சரி, இப்போ என்னோட யாஹு அக்கௌண்ட்ல இருந்து உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பறேன்." என்று விட்டு என் கணக்கிலிருந்து தமிழில் தட்டச்சடிக்க ஆரம்பித்தேன்.

"புடிச்சுருக்கா?" என்று மெதுவாக என்னருகில் அந்தப்பெண்ணின் குரல் கேட்டது.

(க்ருபா, அவ்வளவு சீக்கரம் சொல்லாத!)

"புடிச்சுருக்கே நல்லா! நான் எப்பவும் IEதான் யூஸ் பண்ணுவேன். ஃபயர்ஃபாக்ஸை விட இதுதான் ரொம்ப புடிக்கும்"

"என்னது?"

"ப்ரௌசர்தானே கேட்டீங்க?" என்றேன்.

"அது இல்லை."

"பின்ன எது?" என்றேன்.

(மனசு: 'என்னைப் புடிச்சு இருக்கா?'ன்னு கேட்டாதான் நேரிடையா பதில் சொல்வேனாக்கும்!)

எப்படி சொல்வது என்ற தயக்கத்தால் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

"ஓ, இந்த கம்ப்யூட்டரா. ஆமாம், ஆமாம். இது ரொம்ப புடிக்கும். புதுசு, செலரான். 2.4 கிகாஹெர்ட்ஸ்."

"அத கேக்கலை..." என்ற அதே டோனில் அதே குரல் இன்னும் பிசிறி.

ஐயோ பாவம்டா க்ருபா, ஏன் இப்படி விளையாடற? புடிச்சுருக்குங்கறதை சொல்லித் தொலையேன்.

"பின்ன எது?" என்றேன் விடாமல்.

பிறகு அந்த டாப்பிக் பக்கமே வரவில்லை.

இதற்கிடையில் பேசிக்கொண்டே யாஹுவிலிருந்து நான் அனுப்பிய மடல் ரெடிஃப்மெய்லுக்குள் வந்துவிட்டதா என்று பார்த்தேன். ம்ஹூம். என்ன கஷ்டகாலம்டா இது. சரி போ, என் குற்றம் இல்லை. யாஹூ குற்றம். ரெடிஃப் குற்றம்.

கிட்டத்திட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிவிட்டதால் வெளியில் களேபரம். அம்மா கதவைத் தட்டும் சத்தம். ஐயோ! இன்பாக்ஸ்ல ஈமெய்ல் வந்தா எப்படி இருக்குன்னு சீக்கரம் காமிக்கணுமே!

"நான் அப்பவே நெனச்சேன். நீ கம்ப்யூட்டர் முன்னாடிதான் ஒக்காந்துருப்பேன்னு. தனியாப்போய் பேசுடான்னு அனுப்பினா ரெண்டு மணிநேரமா கம்ப்யூட்டர் பத்திதான் பேசினயா? இன்னொரு நாள் பாத்துக்கோ அதையெல்லாம். ஏற்கனவே ரொம்ப இருட்டிப்போச்சு, நேரம் ஆச்சு களம்பணுமாம் எல்லாரும்."

அம்மா, இரு. ஈமெய்ல் இன்னும் வந்து சேரலை.

"இல்லம்மா, இரு ஒரே நிமிஷம்."

"இந்தா டிஃபன்." என்று சொல்லி அம்மா டிஃபன் தட்டை இருவருக்கும் கொடுத்ததும் செஷன் முடிவுக்கு வந்தது புரிந்தது.


* * * * ** * * * ** * * * ** * * * *

பெண்ணைப் பார்த்துப் பேசியகையோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். வழக்கம்போல் பணியகம் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது இன்னொரு புது ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.

நான் இந்த வாரம் முழுதும் எதையோ நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் எங்கள் பணியக க்ராஃபிக்ஸ் டிசைனர். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.

க்ராஃபிக்ஸ் டிசைனர் முதல் முதலாக பொய் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

Saturday, April 02, 2005

சும்மா, கொஞ்ச நேரம்...

"ஃபர்ஸ்ட் ரேங்க் வரும்னு நெனச்சேன். மிஸ் ஆகிடுச்சு."

"ரெண்டாவது ரேங்க் வாங்கினதுக்கா இவ்வளவு கவலைப்படற?"

"ம்ஹ¥ம். பாஸ் ஆனாதான் ரேங்க் லிஸ்ட்லயே பேர் வருமாம். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தா பாஸ் ஆகி இருப்பேன்."

**************

"ஸ்கூலுக்கே போகாம எப்பவும் கட் அடிச்சுட்டு வெளிலயே சுத்துவானே உங்க பையன், வளர்ந்ததும் இப்போ பெரிய மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவா ஆகிட்டானா?"

"நீங்க வேற. கம்பனி கம்பனியா தாவி வேலையில்லாம இருக்கான்."

**************

"உனக்கு கணக்கு டீச்சர்ன்னா ரொம்ப புடிக்குமா ஏன்?"

"இங்க்லீஷ் தெரியலைன்னு என்னைத் திட்ட மாட்டாங்க."

"போன வாரம் இங்க்லீஷ் மிஸ் புடிக்கும்னயே?"

"உண்மைதான். அவங்களும் எனக்கு கணக்கு தெரியலைன்னு திட்ட மாட்டாங்க"

*****************

"தலைவர்க்கு ஈமெய்ல் பயன்படுத்த கத்துக்குடுத்தயே, மொதல் காரியமா என்ன பண்ணினார்?"

"தொகுதி மக்கள்கிட்ட இருந்து வர மின்னஞ்சல் எல்லாத்தையும் ஜங்க்மெய்ல் பாக்ஸ்க்கு போக செட் பண்ணினார்."

**************

"சுனாமி வருதுன்னு புரளியைக் கிளப்பிட்டு, இன்னமும் பொய் சொல்லலைன்னு சாதிக்கறாரே?"

"அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்த அவரோட மனைவியைச் சொன்னாராம்."

************

Tuesday, March 08, 2005

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்



(என்ன இருந்தாலும் மேலKindக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை)

Thursday, March 03, 2005

விருந்தினர்ப்பதிவு -நந்தகுமார் ராதாக்ருஷ்ணன்

The Bachelor

It was not "someone" who called me a bachelor thefirst time. It was "something". The brownofficial-looking envelope I received by registeredpost that day had my degree certificate in it.'Bachelor of...', it announced in somewhat gaudyletters as I stood smiling. Bachelor!
Till then I was a boy, a brother, a student andwhatnot -- but not a bachelor. All of a sudden, thatimportant piece of paper had given me a new identity.


I know you are dying to tell me things like 'thisbachelor is not that bachelor', but believe me, thevery next day my phone rang. It was my real-estateagent, an uneasy reminder to the approachingexpiration of the initial company accommodation. "Sir,you are a bachelor, are you not?"

"Sure, I am," I said, almost adding, "and now I haveproof of that, if you need."

"Sorry sir. The owner is not willing to give thehouse to bachelors. But don't worry, sir, I have manyother houses. You see..."

So that's how it is. No country for the people ofPalestine. No food for starving Somalis. No trees formigrating birds. And yes, no houses for poorbachelors.

They are not welcome in residential areas. Bachelorsparty and make noise round the clock. They go afterthe neighborhood girls. They don't respect the normsof the colony. They come in groups...

Anyway, I learnt my lesson: Bachelors don't have allthe civil rights that 'normal' citizens enjoy. Butthen, what do we have that makes many a married guycherish the memories of his long-lost bachelorhood?

Palestinians have to cling to their land. Migratingbirds are bound by directions. But a bachelor has fewrestrictions. Except for renting an apartment andwalking into one those stupid 'couples only' clubs,he can have everything else.

He gets up at any time and sneaks into the officeunnoticed when others get ready for lunch. He sits toalmost any time in front of the computer withoutworrying about anxious where-are-you calls. He staysaway from the house for days and no questions areasked. He does whatever he wants on the weekend, inthe company of his friends...

Yes. Friends are the most important aspect of anybachelor's life. Without them he practically has noexistence, especially if he's staying away from home.But then one day, over the thundering music and thefirst round of cold beer in a dimly lit pub, heannounces his plans to get married to this cute girlthat someone else had found for him. Over the doublecheers, the naughty comments and laughter, I becomeaware of something that hurts me somewhere.

My friend's getting married. Of course it'ssomething to celebrate. But then, that also means he'sleaving the gang! We attend his wedding, the mostcolorful function of his life, in full spirits. All of us. We give him gifts, wish him good luck and retreatto our good old world, one member less. It does nottake much time before we find him reduced tomuch-delayed replies to our bunch of mails -- and asfor phone calls, that comes only once in a blue moon.

For my part, I watch the pile of wedding invitationsin the corner of my desk grow at an amazing, alarmingpace. Before I know it, most of my cool buddies aregone. And the rest of us soon realize that we are notalways welcome to the new circle the married men haveformed. So we seek solace behind those office doorswhere the sun never sets.

I do meet my married friends occasionally. In theoffice, on a casual walk, or in a busy restaurant.They are my friends still. And they are still friendlyas much as their new lifestyle and addedresponsibilities permit.

But... Oh heck, there's my telephone. I think it ismy real-estate agent again.

--~ The Bachelor

பி.கு.: இதை அப்படியே சாரம் மாறாமல் தமிழில் மொழிபெயர்ப்பவர்களுக்கு மேல்Kind சார்பில் ஒரு பரிசு (கொள்ளு அல்லது தவிடு மூட்டை) தரப்படும். யாராவது...?

Friday, February 25, 2005

சத்தி விடங்கி

நேற்று கோழியர் சங்கம் வரைப் போய் வந்தேன். காதில் கேட்ட சில உரையாடல்கள் இதோ...


"
"என் கணவருக்குத் தங்கமான மனசு"

"அப்படியா?"

"ஆமாம். நேத்து கூட அன்பா 'துஷா துஷா, உன் கை தவறி விழுந்தாலும், என் தலைல பட்டதாலதான் அந்த சப்பாத்திக்கட்டை உடைஞ்சது. அழாதே'ன்னு சமாதானப்படுத்தினார்."



"உங்க கணவரோட ரொம்பநாளா குடித்தனம் நடத்தறீங்க போலருக்கே!"

"எப்படி நெல்வசாயகி கண்டுபுடிச்சீங்க?"

"வாசல்ல 'நாய் ஜாக்கிரதை'ன்னு போர்டு வெச்சுருக்கீங்களே, அதான்."


"யெஜந்தி, எல்லாப் பெண்களும் சேர்ந்து படம் எடுத்த என்னபடம் வைப்பாங்க?"

"மண்மதி"


"ஒரு வேலையுமே செய்யாம இப்படி வீட்ல மரமா ஆன மாதிரி இருக்கியே? உன் கணவர் ஒன்னும் சொல்றதில்ல?"

"மரம் என்ன மரம்! நான் புல்லே ஆனாலும் அவர் புருஷன்தானாம்"


"என்ன, உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையே வராதா? அது எப்படி?"

"யோவ், நான் கோழியர் சங்க வாட்ச்Man. போ வெளில!"





கோழி என்ற ஒரு சொல் மேல்Kindஇல் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, "கழுதைகளைப் பற்றி சில உண்மைகள்" போன்று தலைப்பிட்டு ஏதேனும் அங்கதங்கள் கோழியர்ப்பதிவில் இடம்பெறலாம். தொடர்ந்து பல்லி, பூரான், வௌவால், நட்டுவாக்கிளி ஆகியவைகளைத் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றியும் அலசப்படும்.

Wednesday, February 09, 2005

untitled

Selpdsiyil irunthu padhippiththa pulambal ithu. thamizil ezuththukkal therigirathaa?

Tuesday, February 08, 2005

untitled

Vanakkam.
cell phone-la irundhu chummaa oru test posting.

Monday, January 24, 2005

மேல்Kind Revision Examination

Match the following: (5 x 4=20)
--------------------
'அ' வரிசையில் காணப்படும் சொற்களுக்கு மிகப்பொருந்தக்கூடிய வார்த்தைகளை 'ஆ' வரிசையிலிருந்து தேர்ந்த்டுக்கவும்.

எண்
1அன்புள்ளமனைவி
2டேய்ஆசிரியர்
3ப்ரியமானஅம்மா
4மதிப்பிற்குரியநண்பன்
5அடியேய்காதலி


Re-arrange jumbled words (1 x 10=10)
-------------------------
கீழ்க்காணும் வாக்கியத்தின் வார்த்தைகள் சற்று குழம்பியுள்ளதால் மாற்றுபொருள் தருகிறது. அதைத் திருத்தி அமைத்து சரியான பொருள் காண்க:

கண்ணே நேற்று இரவும் மின்சாரம் இல்லை. தூங்கும் உன் அப்பாவைப் பார்த்துத் தாக்கி பணம் வாங்கித் தா; பில் கட்ட வேண்டும். பிறகு நாளை மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் முத்தமிட்டுக் கொள்கிறேன்.

Odd word out (5 x 4 = 20)
------------
கீழ்க்காணும் வரிகளில் ஒவ்வொரு நான்கு வார்த்தைகளிலும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் மற்ற மூன்றுடன் பொருந்தாமல் உள்ளது. அவ்வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்

1) புத்திசாலி, பகுத்தறிவு, விவேகம், காதல்
2) நிம்மதி, அமைதி, திருமணம், சாந்தம்
3) லவ்லட்டர், உழைப்பு, உயர்வு, முன்னேற்றம்
4) வெட்கம், மானம், அரியர்ஸ், கவரிமான்
5) தெனாவெட்டு,கிண்டல், இளமை, மூப்பு



விடைகள்
---------
Match the following:
அன்புள்ள=அம்மா, டேய்=நண்பன், ப்ரியமான=காதலி, மாதிப்பிற்குரிய=ஆசிரியர், அடியேய்=மனைவி

Jumbled Words:
கண்ணே, நேற்று இரவும் உன் மின்சாரப் பார்வைத் தாக்கி தூக்கம் இல்லை. நாளை முதலில் பார்த்துக்கொள்ளலாம், முத்தமிட்டு மருத்துவம் தா. உன் அப்பாவைப் பிறகு பார்த்து பில் கட்டிக் கொள்கிறேன்.

Odd word out:
1=காதல், 2=திருமணம், 3=லவ்லட்டர்,4=அரியர்ஸ்,5=மூப்பு