"ஃபர்ஸ்ட் ரேங்க் வரும்னு நெனச்சேன். மிஸ் ஆகிடுச்சு."
"ரெண்டாவது ரேங்க் வாங்கினதுக்கா இவ்வளவு கவலைப்படற?"
"ம்ஹ¥ம். பாஸ் ஆனாதான் ரேங்க் லிஸ்ட்லயே பேர் வருமாம். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தா பாஸ் ஆகி இருப்பேன்."
**************
"ஸ்கூலுக்கே போகாம எப்பவும் கட் அடிச்சுட்டு வெளிலயே சுத்துவானே உங்க பையன், வளர்ந்ததும் இப்போ பெரிய மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவா ஆகிட்டானா?"
"நீங்க வேற. கம்பனி கம்பனியா தாவி வேலையில்லாம இருக்கான்."
**************
"உனக்கு கணக்கு டீச்சர்ன்னா ரொம்ப புடிக்குமா ஏன்?"
"இங்க்லீஷ் தெரியலைன்னு என்னைத் திட்ட மாட்டாங்க."
"போன வாரம் இங்க்லீஷ் மிஸ் புடிக்கும்னயே?"
"உண்மைதான். அவங்களும் எனக்கு கணக்கு தெரியலைன்னு திட்ட மாட்டாங்க"
*****************
"தலைவர்க்கு ஈமெய்ல் பயன்படுத்த கத்துக்குடுத்தயே, மொதல் காரியமா என்ன பண்ணினார்?"
"தொகுதி மக்கள்கிட்ட இருந்து வர மின்னஞ்சல் எல்லாத்தையும் ஜங்க்மெய்ல் பாக்ஸ்க்கு போக செட் பண்ணினார்."
**************
"சுனாமி வருதுன்னு புரளியைக் கிளப்பிட்டு, இன்னமும் பொய் சொல்லலைன்னு சாதிக்கறாரே?"
"அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்த அவரோட மனைவியைச் சொன்னாராம்."
************
24 comments:
சூப்பர்
என்னப்பா எல்லாரும் பிஸியா? மாசத்துக்கு ஒரு பதிவுதான் போடறதுன்னு கணக்கு வச்சுக்கிட்டீங்களா? malekind கொஞ்ச நாள்ல stalekind ஆகிடாம பாத்துக்குங்க.
படு பிஸியா இருந்தாலும் நடு நிஸியில stealkind பண்ணி ஒரு எண்ட்ரி போட்டுடணும்னு ஒரு கொள்கை இருக்கு. மற்ற பேச்சுலர்கள் கூடியவிரைவில் தேவை(தேவதை)களை நிறைவேற்றி முடித்ததும் தொடர்ந்து வலைப்பதிவார்களாம்.
By: சு. க்ருபா ஷங்கர்
//"உனக்கு கணக்கு டீச்சர்ன்னா ரொம்ப புடிக்குமா ஏன்?"
"இங்க்லீஷ் தெரியலைன்னு என்னைத் திட்ட மாட்டாங்க."
"போன வாரம் இங்க்லீஷ் மிஸ் புடிக்கும்னயே?"
"உண்மைதான். அவங்களும் எனக்கு கணக்கு தெரியலைன்னு திட்ட மாட்டாங்க"//
என்னுடைய பதிவில் எழுதியிருக்கிற Pollyannaட பார்வை மாதிரி இருக்கு! :o). மற்றவங்க தேவை(தேவதை)களை பார்த்துட்டு வரட்டும், நீங்களாவது எழுதுங்க க்ருபா..அப்புறமா கலர் தெரப்பிக்கு போகலாம். ;o)
ஒரு சின்ன சந்தேகம்....தேன்+வதை (அதாவது தேன் போல இனிய வதை/துன்பம்) தான் மருவி தேவதை என்று ஆகிச்சாமே..உண்மையா? கொஞ்சம் அறிஞ்சு சொல்றீங்களா?
By: ஷ்ரேயா
MACHIS, I REALLY LIKED THIS TAMINGLISH CONVERTER (PULAMBAL PETTI) - I WANT TO USE THIS IN MY BLOGSPOT TOO - CAN ANYONE TELL ME HOW?
ஷ்ரேயா, நன்றி நன்றி. தேவதைன்னா, சந்திரமுகி தேவதையைப் பார்க்க போய்ட்டாங்க(ன்னு வைச்சுக்கோங்க).
தேடினால் வதைங்கறது தேவதைன்னு மாறினதா பழுவேட்டரையர்கள் கல்வெட்டு தெரிவிக்கிறது. :-))
By: சு. க்ருபா ஷங்கர்
Anonymous,
ராஜாவோட வலைப்பதிவுல "டெஸ்ட்" "டெஸ்ட்"னு test பண்ணினது நீங்கதானே? சரி, இருந்தாலும் சந்தேகத்துக்கு சாம்பார் அபீட்டு:
இறுதியாகக் காணப்படும் சுட்டியில் போய்ப்பார்த்தாலே போதும். இருந்தாலும் முழுசும்:
ஆரம்பம்: http://www4.brinkster.com/shankarkrupa/blog/default.asp?entryID=27
செப்பனிடல்: http://kosappettai.blogspot.com/2004/09/blog-post_13.html
வளர்ச்சி: http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_14.html
நிறைவு: http://www.suratha.com/bcode.htm
சந்திரமுகி பார்க்கப் போறேன் என்று உங்களுக்குச் சொல்லிட்டு, உண்மையாவே அவங்களுடைய சந்திரமுகி(நிலாவைப் போல முகம்)( பரு வந்து பள்ளம் திட்டியாக இருக்குமோ??) பார்க்கப் போயிருப்பாங்க. அ(ட)ப்பாவி க்ருபாவும் அதைஅப்படியே நம்பிட்டு...
பழுவேட்டரையர் கல்வெட்டில யாரோ கைவரிசையை காட்டியிருக்காங்க என்று தகவல் வருது...எதுக்கும் கவனமா இருக்கவும். :o)
சந்திரமுகி பார்க்கப் போறேன் என்று உங்களுக்குச் சொல்லிட்டு, உண்மையாவே அவங்களுடைய சந்திரமுகி(நிலாவைப் போல முகம்)( பரு வந்து பள்ளம் திட்டியாக இருக்குமோ??) பார்க்கப் போயிருப்பாங்க. அ(ட)ப்பாவி க்ருபாவும் அதைஅப்படியே நம்பிட்டு...
பழுவேட்டரையர் கல்வெட்டில யாரோ கைவரிசையை காட்டியிருக்காங்க என்று தகவல் வருது...எதுக்கும் கவனமா இருக்கவும். :o)
By: ஷ்ரேயா
ஷ்ரேயா, பாவம் சின்னப்பசங்க, மன்னிச்சு விட்டுடலாம். என்ன ஒன்னு, எல்லா மேல்Kind பேச்சுலர்களும் சந்திரமுகி பார்த்துட்டாங்க போலருக்கு, என்னைத் தவிர. :-((
இருக்கட்டும், இருக்கட்டும். மேல்Kind பேச்சுலர்களில் சீக்கரமா பேச்சிலரா ஆகப்போறது நான் தானே!
பொன்னியின்செல்வன் தவிர்த்து, பழுவேட்டரையர்கள் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும்னா, பழுவேட்டரையர்கள் பத்தின ஒரு ஆராய்ச்சித் தொடர்:
http://www.varalaaru.com/Default.asp?articleid=116
By: சு. க்ருபா ஷங்கர்
ஆஹா! மாட்டுப்பட்டுட்டீங்களா....யாரு உங்க தேவதை?
By: ஷ்ரேயா
Thanks kiruba for the links :)
MexicoMeat
தேவதை இங்கதான் பக்கத்து ஊர்லயா இருந்தது. இப்போதான் கண்டுபுடிச்சாங்க:-)
By: சு. க்ருபா ஷங்கர்
வாழ்த்துக்கள் கிருபா!!!
பத்திரிக்கை உண்டா???
...aaddhi
கல்யாணம் சப்போஸ் நடந்தா நிச்சயம் பத்திரிக்கை உண்டு. ஆமாம், ஆதி. உங்க மின்னஞ்சல்?
By: சு. க்ருபா ஷங்கர்
அட, டும்டுமா? எப்போ? வாலெல்லாம் இனிமே சுருட்டிக்கணுமேன்னு கவலையா இருக்குமே !
வாழ்த்துக்கள் ! பத்திரிக்கை உண்டா எனக்கும்?
வால், வாய் எல்லாம் போய்டும், என்ன பண்றது? :-(
பத்திரிக்கை கண்டிப்பா தரேன், அனா நீங்க பேர் சொல்லணூம், ஆமாம்.
By: சு. க்ருபா ஷங்கர்
என் பெயர் தெரியுந்தானே...அழைப்பு உண்டா?? உங்க தேவதைக்கு எங்க சார்பில் ஒரு பெரீய்ய்ய "ஹாய்"!! சொல்லிடுங்க!
இங்கிலிபீசு ஹாய் மாதிரி தமிழ்ல சொல்வதற்கு ஒன்றைக் கண்டுபிடிக்கணும்!!
By: ஷ்ரேயா
//மேல்Kஇன்ட் பேச்சுலர்களில் சீக்கரமா பேச்சிலரா ஆகப்போறது நான் தானே!
// சரியா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடிடிக்கீனீயா ?
By: ரவியா
ஷ்ரேயா, அழைப்பு அனுப்பி வைக்கறேன். நீங்க வராட்டியும் ஆஸ்ட்ரய்லியாலேர்ந்து ஏதாவது ஒரு கங்காருவையாவது அனுப்பி வைங்க.
நானே சின்னதா எப்படி ஒரு ஹாய் சொல்றதுன்னு தயங்கித் தயங்கி முழிக்கறேன். நான் எப்போ தைரியமா பேசி, "தேவதைக்கு" உங்க சார்பில் 'ஹாய்' சொல்லி... ம்ம்ம்ம், என்னமோ போங்க.
சு. க்ருபா ஷங்கர்
By: சு. க்ருபா ஷங்கர்
ரவியா, இல்லை இல்லை இல்லை. மாட்டிக்கலை. இன்னும் அரை/ஒரு வர்ஷமாவது ஆகுமாம். அது வரைக்கும் பேச்சுலர்ஸ்' ஹாஸ்டல்தான் வாஸஸ்தலம்.
By: சு. க்ருபா ஷங்கர்
கடைசி ஜோக்கை கல்யாணம் ஆனப்புறம் மறுபடியும் சொல்லச் சொல்லிக் கேட்பேன்.
- சத்யராஜ்குமார்
அப்பனே ஞானபண்டிதா, கல்யாணமெல்லாம் பண்ணிக்காத. சந்தோஷம் போயிடும். பேக்கு மாதிரி அலைஞ்சித் திரியவேண்டியிருக்கும். இப்ப ஒரு மாதிரி கிறுகிறுன்னுதான் இருக்கும். அப்பாலதான் அவதி புரியும். சொல்றத சொல்லிட்டேன். அப்புரம் உன் இஷ்டம்.
By: மோனிகாலெவின்ஸ்கி
சத்யராஜ்குமார், கல்யாணத்துக்கு மொதல் நாள் அன்னிக்கு எனக்கு பழசெல்லாம் மறந்துடுமாம், ஜோசியர் சொல்லி இருக்கார். :-))
மோனிகாலெவின்ஸ்கி, கல்யாணம் ஆக எல்லாம் இன்னும் நிறைய நாள் ஆகுமாம். அதுக்குள்ள மனசை திடமாக்கிக்கோன்னு. பாட்டி சொல்படி, பேரன்.
By: S Krupa Shankar
Post a Comment