Saturday, October 30, 2004

இந்தப் பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்

இடம்: அகில உலக ஆண்கள் முன்னேற்ற சங்கம்
அமர்வு: குட்டிச் சுவர்
வேளை: சாயங்காலம்
வேலை: வெட்டி

பேச்சுலர்கள் வழக்கம் போல வெட்டியாகக் கதைத்துக்கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில் ஒரு சங்க காலப் பாடல் வசமா மாட்டிச்சு. அந்தப் பாட்டோட மேட்டர் இதுதான்:

பொருள் தேடலுக்காக காதலியைப் பிரிந்து காதலன் வேற்றிடம் சென்று விட, பிரிவு தாளாது தவித்தாள் அந்தக் காதலி. அவன் போன ரூட்டு ஒரே காடு. ரொம்ப ஹீட்டு. அதோட பாம்பு, பள்ளி, தேள், பூரான், க்ருபா எல்லாம் வழி முழுக்க. அதுங்களால எல்லாம் தன் காதலனுக்கு ஒன்னும் நேராம இருக்கணும்னு நெனைக்கறா. பக்கத்துல இருக்கற தன் தோழிக்கு செல்ஃபோன் போட்டு பேசறா. சாமிகிட்ட வேண்டிக்கலாம்னும் ஃபெரெண்ட்கிட்ட சொல்றா. ஆனா அப்படி சாமிகிட்ட வேண்டிக்கறது தன்னோட கற்புக்கு ஏற்புடையதா இருக்காதே, என்ன பண்றதுன்னு ரொம்ப வருந்தினாளாம்.


"இதுக்கும் கற்புக்கும் என்ன சம்பந்தம்"ன்னு இளைய பேச்சுலர் ஒர்த்தர் திருதிருன்னு முழிச்சார்.

ஆனால் ஒரு முதிய பேச்சுலர் அதன் உட்பொருளை விளக்கினார்.

"கணவனே தெய்வம்னு நெனைக்கற பொண்ணுபா அது. இப்போ புரிஞ்சதா?"

என்ன இருந்தாலும் அந்தக்காலத்து பொண்ணுங்க அவ்வளவு அன்பாவா இருப்பாங்கன்னு ஒரு பேச்சுலர்க்கு ஒரே ஆச்சர்யம். சரி, என்னவோ! அப்படி நெனச்ச பொண்ணோட வயசு என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் அதிகமாச்சு அந்த பேச்சுலர்க்கு.

குட்டிச் சுவரை விட்டு தடாலென்று தெருவில் குதித்தார் பேச்சுலர். மடமட வென்று போகும் வரும் பெண்களிடமெல்லாம் ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டு சர்வே எடுக்க ஆரம்பித்தார். கிடைத்த 'அன்பு' அர்ச்சனைகள், வாங்கிய செருப்படிகள் எல்லாம் போக தேறிய பதில்களு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த சங்கப் பாடலின் பொருளை ஒரு கதையாகச் சொல்லி கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:

"தன் காதலனுக்காக கடவுள்கிட்ட அந்தப் பொண்ணு வேண்டிக்காத காரணம் சரியா, சரியில்லையா?"

இந்தக் கேள்விக்கு அந்த சங்ககாலப் பொண்ணு மாதிரியே பதில் எந்தப் பொண்ணு சொல்றாளோ அவ வயசுதான் சங்ககாலப் பொண்ணுக்கு. இதுதான் திட்டம்.

சரி, இப்போ கிடைத்த பதில்கள் (துல்லியமான வயது தெரியாததால, பதில் சொன்ன பெண்களின் வயசு ரேஞ்ச் மட்டும் குத்து மதிப்பா):

18-24: "அந்தப் பொண்ணு பண்ணினதுல என்ன தப்பு? 'காதலன்'னு தானே சொன்னீங்க? கணவன் இல்லையே! ம்ம்ம், பாவம். அந்தக் காலத்துல எல்லாம் ஒரு பொண்ணுக்கு ஒரே ஒரு பாய்ஃப்ரெண்ட்தான் போலருக்கு"

25-30: "திருமணமாகி கணவரைப் பிரிஞ்சு இருக்கறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு சொன்னாப் புரியாது." (கொஞ்சம் முகபாவத்தை மாற்றிக்கொண்டு) "It's something to be realized by experience. Ohwmegwaad! Terrible. You see, itz like, like... really awesome. Ever read Sydney Sheldon's...?" (மேலும் தொடர்ந்த 'மேரி'யின் அறிவுப் பிரதிஷ்டை தாங்க முடியாததால் கேள்விகேட்ட பேச்சுலர் ஓடி ஒளிய வேண்டியதாப் போச்சு)

31-37: "அந்தப் பொண்ணுக்கு குழந்தைகள் பற்றிய கவலைதானே இருக்கணும்? கணவரைப் பத்தி கவலைப் பட என்ன இருக்கு?"

38-45: "நல்லா புரிஞ்சது. அந்தப் பொண்ணோட வயசைக் கண்டுபுடிக்கணும்னுதானே இதையெல்லாம் கேக்கறீங்க? ஒரு பொண்ணோட வயசைப் பத்தியெல்லாம் ஏன் யோசிக்கறீங்க? அந்த பாட்டு நல்லா இருந்ததா? அதோட கருத்து உங்களுக்குப் புரிஞ்சதா? அவ்வளவுதான்."

46-55: "பெண்களைப் பொருத்த வரை கணவன் தெய்வம்தான். அப்படித்தான் ஆண்கள் பெண்ணாதிக்கம் பண்றாங்க. கல்லுல இருந்தாலும் தெய்வம் தெய்வம்தான். கல்லாவே இருந்தாலும் கணவன் கணவன்தான்னு தானே பெண்களை அடிமைப் படுத்தி வெச்சுருந்தாங்க? ம்ம்ம், சரி என்ன கேட்டீங்க? ஓ... அந்தப் பொண்ணு பண்ணினது..ம்ம்ம். இல்லைங்க, அப்பறமா சொல்றேன், வீட்ல என் கணவர் வத்தக் குழம்புக்கு அரிசி அப்பளாம் சுட்டு வெச்சாரா இல்லையான்னு தெரியலை. இன்னொரு நாள் சொல்றேனே, இப்போ போகணும்."

56-65: --இந்த வயதுக்குள் யாரும் கிடைக்கவில்லை--

66-85: "அந்தப் பொண்ணு பண்ணினது எப்படிப் பாத்தாலும் ரொம்ப சரி. ஏன்னா, கடவுள்கிட்ட வேண்டி ஒரு வேளை அவள் கணவன் நிஜமாகவே காப்பாற்றப்பட்டு விடும் அபாயம் இருக்கு."

பெண் எந்த வயதில் தெய்வமாக மதிக்கிறாள் கணவனை என்று இதில் முதலில் அறிய வேண்டும். இப்பொழுது மணி இரவு 2:30 ஆகிவிட்டது. ஆராய்ந்து கண்டுபிடித்து ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கும் முன்னரே அவசர அவசரமாக நடந்த வரை தட்டச்சடித்து, இணையத் தொடர்பு ஏற்படுத்தி, மேல்Kindக்கு அனுப்பி வைத்து...

Saturday, October 23, 2004

நேர் நேர் நேர்(மை)=ஆண்கள்தான்

ஆஹா, பத்த வெச்சுட்டாஙய்யா பத்த வெச்சுட்டாங!!! முச்சங்கர் கூட்டணின்னு சொல்லிட்டு ஒருவரே எழுதிட்டிருக்கற மாதிரி இருக்கேன்னுட்டாரே! எல்லாம் போட்டுட்டு கூடவே 'வெள்ளாந்தி'ன்னும் போட்டுட்டார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

கூட்டணி ஆட்சி என்பது என்ன? விட்டுக் கொடுப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது. அடா, அடா, அடா அடா. ஆண்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று சிம்பாளிக்காக டெமோ காண்பிக்கலாம் என்று பார்த்தால் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!

சரி, சரி. சிம்பாளிக் எல்லாம் போதும். நேரமின்மை எல்லாம் இருந்தால் எப்படி ஆண்கள் ஒருவருக்கொருவர் அவரை இவர், இவரை அவர், அவர்களை இவர்களும் அவர்களும் 'கவர்' செய்து கவர்வார்கள் என்று நிரூபித்தாகி விட்டது. ஒருவருக்குப் ஒரு ப்ரச்சனை என்றால் எப்படி ஆண்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் நிரூபித்தாகி விட்டது.

தாலாட்டுப் பாடியவர்கள் குரல் பதிவு செய்ய என்ன உதவி கேட்டாலும் செய்யவும் அகில உலக ஆண்கள் முன்னேற்ற சங்கம் தயாராக இருக்கிறது என்பதை மட்டும் மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

நவன், ஜோதிகா தங்கச்சி மீனாக்ஸோட ஆளு. தெரியுமா? ;-)

Friday, October 08, 2004

வாயில்லாப் பிராணிகளுக்கு எனது வணக்கங்கள்!

எல்லாப் பெண்களுக்கும் என்னைப் பிடிக்கிறது. (பொய்! அவளுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. வரவர ரொம்ப முறைக்கிறாள்.)
---

"ச்சோ ச்ச்வீட்"
"மச்சான்! எப்பயாவது பசங்களோட சுத்த கொஞ்சம் முயற்சி பண்ணுடா!"
"எங்கே செல்லும் இந்தப் பாதை..."
"டேய்! அவ ஏற்கனவே எங்கேஜ்டாமா"
"எனக்கு அடுத்த மாசம் பத்தாம் தேதி நிச்சயதார்த்தம்டா! அவர் ஐபிஎம்ல ப்ராஜக்ட் மானேஜர். சொன்னேனே! அது பிக்ஸ் ஆயாச்சு. உனக்கு இன்விடேஷன் எல்லாம் கிடையாது. கட்டாயம் வந்துடு"
---

நான் வாங்கிவந்திருப்பது சாபமா வரமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
---

அலுவலகத்தில் நந்தா என்று ஒருவன் இருக்கிறான். என்னைப் பார்த்தால் தண்ணீர் ஏறாத சென்னை மோட்டார் மாதிரி சீறுகிறான். அவளுக்காகத் தவமிருக்கிறான் (இந்த அவள் அந்த அவளல்ல. வேறெத்தனையோ அவள்களில் ஒரு அவள்). அவளுக்காக இடுப்பு சுற்றளவைவிட இரண்டு இன்ச்சு குறைந்த கால்சட்டைகளையெல்லாம் போட்டுக்கொண்டு முழுநேரப் பிராணாயாமத்தில் ஈடுபட்டிருக்கிறான். அவள் வீட்டிற்குக் கிளம்பக்கூடிய சாத்தியமுள்ள எல்லா நேரங்களிலும் அலுவலக ரிசப்ஷனில் எகனாமிக் டைம்ஸை முறைக்கிறான். அவள் என்னிடம் பேசுகிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக எனக்குப் புதுப்பேட்டையில் ஆட்டோ தயார் செய்துகொண்டிருக்கிறான்.
---

கல்லூரியில் ஒரு ஆசிரியர். அவர் பெயர் போஸ். அவர் பாடம் எடுத்தால் நாங்களெல்லோரும் பியூஸ். கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் இறுதித்தேர்வில் யார் முதல் மதிப்பெண் என்று அவருக்கு தோஸ்தான என் நண்பன் போய் அவரிடம் கேட்கிறான். அவருக்கு என் அடையாளம் தெரிகிறது. ஆனால் பெயர் மறந்துவிட்டது.

"அதாம்பா, ஒல்லியா வெள்ளையா இருப்பானே"
"யாரு சார், தெரியலியே!"
"நம்பர் 200034122"
"சார், என் நம்பரே எனக்கு சரியா தெரியாது, நீங்க வேற..."
"அட! அதாம்பா, எப்ப பாரு நாலஞ்சு பொண்ணுங்களோடயே சுத்திகிட்டு இருப்பானே"
"ஓ! அவனா! ஒக்கே ஒக்கே"
"அவன் பேரு என்ன?"
"ஷங்கர் சார்"
---

எங்கள் அலுவலகத்தில் எனக்குத் திருமணஞ்சேரி என்று பெயரிட்டிருக்கிறார்கள். நான் பார்வையை வீசும் எந்தப் பெண்ணுக்கும் அடுத்த சில தினங்களில் கண்டிப்பாகத் திருமணமோ நிச்சயமோ நடந்துவிடுகிறது. அவர்கள் என்னிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டால் இந்த சுபயோகத்தின் பலன் மேலும் அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
---

மேல்kind குழுவின் அங்கத்தினனாக என்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துக்கொள்கிறேன். இந்தக் குழு Priory of Sion மாதிரி பல நூற்றாண்டுகள் தழைத்தோங்கட்டும்! அதற்கு நேரெதிரான கொள்கையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு பணியாற்றாட்டும்!

வாயில்லாப் பிராணிகளுக்கு எனது வணக்கங்கள்!

Thursday, October 07, 2004

ஒரு பேச்சுலரின் டைரி வலைக்குறிப்புகள்






குளிக்கப்போன ரூம்மேட்டின்

பணத்தைத் திருடுவது

ஒழுக்கக்கேடான செயலல்ல

அவன்

பர்சிலுள்ள ஃபோட்டோவை

ரசிப்பதைக் காட்டிலும்








உலக அதிசயங்கள்:

  • ராக்கிக் கட்டி காசு வாங்காத பெண்
  • பெட்ரோல்டேங்க் நிரம்பியிருக்கும் இரவல் ஸ்ப்லெண்டர்
  • இண்டெர்வ்யூ கார்டு








'ஹலோ' சொல்லும் பெண்ணுக்கு

'லவ் யூ' புலம்புவதும்

'அன்பே' கிறுக்குவதும்

அப்பாவி ஆணுக்கும்

அறிவாளி ஆணுக்கும் உள்ள வித்யாசம்








மனிதர்களில் இரண்டு வகை-

  • அப்பாவிகள் ஏமாறுபவர்கள்
  • பெண்கள் ஏமாற்றுபவர்கள்

















செயற்கை அழகுப் பொருட்கள்:

  1. துவைக்க மறந்த துணிகள்
  2. மேஜையும் கலைந்து கிடக்கும் புத்தகங்களும்
  3. வாடகை கறக்கத்தெரியாத வீட்டு ஓனரின் முகம்


இயற்கை அழகுப் பொருட்கள்:

  • எல்லாமே, பெண்களைத் தவிர