Wednesday, September 07, 2005

பேட்டைப் பிள்ளையாரும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

பேச்சுலர் சங்கத்தின் சீனியர் உறுப்பினர் பிள்ளையாருக்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் பிள்ளையார் வாங்கி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு இந்தியத் தலைநகருக்குச் சென்று விட்டதால் நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (வீட்டுலதான்) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

சென்னையின் அருந்தலமாம் சைதைத் திருத்தலத்தில் இந்த ஆண்டு களிமண்ணில் பண்ணிய பிள்ளையார் சிலையின் விலை ரூ. 15. என் அப்பா வழித் தாத்தாவுக்கு களி மண்ணில் பிள்ளையார் பிடிக்கத் தெரியும். எனக்குத் தெரியாது, களிமண் சுமந்திருந்தும் என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'கஜகர்ணிகாய நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை, "பேச்சுலரா பொறந்து பேச்சுலராவே வாழறியேப்பா இன்னமும்...".



பிள்ளையாருக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் பிள்ளையாருக்குப் பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா பிள்ளையார்! பாவம். ப்ரோக்ராமருக்கு பணியகம் மாதிரி, பிள்ளையாருக்கு பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் மக்கள்ஸ்? இருந்தாலும் என்னே உன் கருணை!

'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா கணேசா?

அடுத்த ஆண்டு தம்பதி சமேதராகப் பிறந்தநாள் கொண்டாட சக பேச்சுலரை மேல்Kind «í¸ò¾¢É÷¸û வாழ்த்தி வணங்குகிறோம்.