Wednesday, September 07, 2005

பேட்டைப் பிள்ளையாரும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

பேச்சுலர் சங்கத்தின் சீனியர் உறுப்பினர் பிள்ளையாருக்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் பிள்ளையார் வாங்கி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு இந்தியத் தலைநகருக்குச் சென்று விட்டதால் நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (வீட்டுலதான்) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

சென்னையின் அருந்தலமாம் சைதைத் திருத்தலத்தில் இந்த ஆண்டு களிமண்ணில் பண்ணிய பிள்ளையார் சிலையின் விலை ரூ. 15. என் அப்பா வழித் தாத்தாவுக்கு களி மண்ணில் பிள்ளையார் பிடிக்கத் தெரியும். எனக்குத் தெரியாது, களிமண் சுமந்திருந்தும் என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'கஜகர்ணிகாய நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை, "பேச்சுலரா பொறந்து பேச்சுலராவே வாழறியேப்பா இன்னமும்...".



பிள்ளையாருக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் பிள்ளையாருக்குப் பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா பிள்ளையார்! பாவம். ப்ரோக்ராமருக்கு பணியகம் மாதிரி, பிள்ளையாருக்கு பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் மக்கள்ஸ்? இருந்தாலும் என்னே உன் கருணை!

'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா கணேசா?

அடுத்த ஆண்டு தம்பதி சமேதராகப் பிறந்தநாள் கொண்டாட சக பேச்சுலரை மேல்Kind «í¸ò¾¢É÷¸û வாழ்த்தி வணங்குகிறோம்.

9 comments:

Anonymous said...

இதைத்தான் நாங்க பக்கத்து இலைக்கு பாயாசம்னு சொல்லுவோம்! விநாயகருக்கே மவுசா? விநாயகரு லைப்புல க்ருபாக்குத்தான் எத்தனை அக்கறை பாருங்க! :) சீக்கிரம் மேட்டரை முடிங்க தல! அடுத்தவருசம் நீங்களும் //பிள்ளையாருக்குப் பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் பிள்ளையாருக்குப் பொறந்த நாள் கொண்டாடறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க.// :)

By: இளவஞ்சி

Anonymous said...

நம்மளை டீல்ல விட்டியேப்பா

By: ஆஞ்சநேயர்

Anonymous said...

கதையை மாத்திறீங்களே, பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள். கொஞ்சம் மும்பை பக்கம் போய்
பாருங்கள். பிள்ளையார் சென்னையில் பாச்சிலராக இருக்கலாம் ஆனால் எல்லா ஊரிலும் பாச்சிலர்
இல்லை :)

By: ravisrinivas

Anonymous said...

க்ருபா - வீட்டில உங்களைத் தவிர யாரும் வலைப்பதிவு வாசிக்கிறதில்லையா?எதுக்கும் இந்தப் பதிவை ஒரு printout எடுத்து, பிள்ளையாருக்குப் பக்கத்திலே வைச்சிருங்க. (வீட்டிலே விளங்கிக்கொண்டால்) அடுத்த வருஷம் "தம்பதி சமேதர்"தான்! All the best!! : O )

By: ஷ்ரேயா

Anonymous said...

//பிள்ளையார் சென்னையில் பாச்சிலராக இருக்கலாம் ஆனால் எல்லா ஊரிலும் பாச்சிலர் இல்லை :) //

ஆம்பள சாமியில்ல! கொஞ்சம் அப்புடி இப்புடித்தான் இருப்பாரு! ;-)

Anonymous said...

இளவஞ்சி, நீங்க வேற. என் இலைக்குப் பாயாசம் கேட்டு பக்கத்து இலைக்கெல்லாம்தான் விழுது. அதான் சும்மா பக்கத்து இலைக்கே ஒரு தடவை கேட்டுப் பார்க்கலாம்னு... ஹி ஹி ஹி. விநாயகருக்கே மௌஸா என்ற உங்கள் சொற்றொடர் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படுவதாக.

ஆஞ்சநேயா! மன்னிச்சுக்கோப்பா. ஆஞ்சநேயர் ஜெயந்தி வரட்டும், மீனாட்சியம்மன், மேரியம்மன், எத்தராஜஸ்வாமி கோவில் வாசல்களில் விசேஷ ப்ரார்த்தனை நடத்திடறேன். ;-) என்ன இருந்தாலும் பேச்சுலராவே இருப்பேன்னு வாயவிட்டு சொல்லிட்டயே, கஷ்டம்தான்.

ரவி ஸ்ரீநிவாஸ், எங்க தெரு பிள்ளையார் கோவில்ல கூட சித்தி/புத்தி படம் வெச்சு ஒரு புள்ளையார் இருக்கு. நானே நம்ம கட்சிக்கு பல்ப்பம், பஞ்சுமிட்டாய், கொழக்கட்டை எல்லாம் குடுத்து படைபலத்தை அதிகமாக்கணும்னு பார்க்கறேன், காப்பாத்துங்க காப்பாத்துங்க!

அப்படி கண்ல படற மாதிரி printout எடுத்து வெச்சா அப்பறம் நான் வீட்டுல out of print ஆகிடுவேன் ஷ்ரேயா. தேசப்ரஷ்டம்தான். :-))

அனானிமஸ், womenkind மக்கள் இப்படி விசில் அடிக்கறாங்களே! சும்மா ஜோக்-னு சொல்லிடுங்க. அப்பறம் பாத்துக்கலாம்.

By: சு. க்ருபா ஷங்கர்

Anonymous said...

ஆகா என்ன அர்புதமான வலைபதிவு, super!!

Anonymous said...

migavum nalla irukku

Anonymous said...

னன்ட்ர்ய்