Thursday, December 30, 2004

திட்ட(டும்) நிரல்

"ஜாவா ப்ரோக்ராமரும் கல்யாணமான ஆணும் ஒன்னு."

"எதை வெச்சு அப்படி சொல்ற?"



ரெண்டுலயும் அனுபவம் இல்லாத krupa வின் கருத்து

"ரெண்டு பேருமே ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் எதிர்கொள்ளணும்."

"என்ன சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு? எல்லா ப்ரோக்ராம்லயும் தான் ·பங்க்ஷணும் ஆர்க்யுமென்ட்சும் இருக்கே?"

"எல்லா பொண்ணுங்களாலயும் கூடதான் ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் சமாளிக்க வேண்டியதா இருக்கே?"



ரெண்டுலயும் அனுபவசாலி ரவியாவின் கருத்துக்கள்
  • "சரியான தலைவலி"
  • "ஜாவா எப்ப கால வாரும்னு சொல்ல முடியாது. ஏன் தகராறு பண்ணுதுன்னு கண்டுபுடிக்கறதே கஷ்டம். wifeம்தான்"
No comments! ;-)


Sunday, December 26, 2004

விருந்தினர் பதிவு: ரஜினி ராம்கி - 2

விஜய் டிவியின் 'அழகி'



விஜய் டிவில புதுசா ஒரு நிகழ்ச்சி. அழகியாம்! வழக்கம்போலவே புதுமையா ஒரு விஷயம் செஞ்சிருக்காங்க. நிகழ்ச்சியோட நோக்கம் (ஹி...ஹி அப்டீன்னு சொல்லிக்கிறாங்கோ!) 'தமிழச்சி'களை கண்டுபிடிச்சு என்கரேஜ் பண்றதாம்!

'குலுக்கல்' முறையோ என்னவோ எப்படியோ ஒரு 200 பொண்ணுங்களை (இன்னும் கல்யாணமாகாதவங்க மட்டும்!) செலக்ட் பண்ணி அவங்ககிட்ட தனித்தனியா கேள்வி கேட்டு பெஸ்ட் தமிழச்சியை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம். வர்ற பொண்ணுங்களெல்லாம் சமூக சேவை செய்யப்போறேன், சினிமாவுல நடிப்பேன், அரசியலுக்கு வருவேன், மதர் தெரஸா மாதிரி ஆவேன்னு டயலாக் எடுத்து வுடறதை கேட்டு காதே புளிச்சுப் போயிடுச்சு... இது வழக்கமான அழகி
போட்டியில்லைன்னு தேர்வுக்கமிட்டியிலிருந்து ஒரு அம்மா வந்து அட்வைஸ் பண்ணினார். ஏதோ ஒரு நடிகையை அழைச்சுட்டு வந்து கருத்து கேட்டாங்க. அவங்களும் பொண்ணுங்களை புடவை சகிதம் பார்க்கிறது அழகா ருக்குதுன்னு இங்கிலீஷில் சொல்லி வைச்சாங்க. சம்பந்தப்பட்ட நடிகை என்ன காஸ்ட்யூம்ல வந்திருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்!

தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் 'மக்கள் யார் பக்கம்' கோபியும் ஒருத்தர் (மனுஷன், கொஞ்சூண்டு தொப்பையை குறைச்சிருக்கார்!). புற அழகை விட பெண்களின் அறிவுதான் உண்மையான அழகுன்னு தான் நினைக்கிறதா சொன்னார். மனுஷனுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு, முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாவது சுற்றுக்கு போகும் பெண்களின் பட்டியலை அறிவிக்கிற வேலை கோபிக்கு. நான் நம்பர் சொல்றவங்களெல்லாம் எழுந்திரிச்சு வெளியே போயிடலாம்னார். ரெண்டு பெண்மணிகள் என்னோட நம்பரை நீங்க சொல்லவேயில்லை... நாங்க வெளியே போக முடியாதுன்னு முஷ்டியை உயர்த்த
செம காமெடி. 'பார்த்தா கல்யாணம் ஆகாதவங்க மாதிரியே
தெரியலையே'ன்னு தேர்வுக் கமிட்டியிலிருந்த யாரோ கேட்டு வைக்க களேபர மேடையில் நடந்த உச்சபட்ச காமெடி காட்சிகளை காமிரா அப்படியே விழுங்கிக் கொண்டது!

அடுத்த ரவுண்டு, செம கலக்கல். பாட் கேட்வாக்! அதாவது பட்டுப்புடவை கட்டிக்கிட்டு கையிலொரு பானையை சுமந்தபடி நடந்து வரவேண்டும். சிலருக்கு புடவை கட்டத்தெரியலைன்னா பல பேருக்கு பானை புடிக்கத் தெரியலை. சிரிச்சுக்கிட்டே நடந்து வரணுமா அல்லது சீரியஸா நடந்துவரணுமான்னு பெரிய சந்தேகம். இந்த ரவுண்டிலேயே மொத்த டீமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ்நாட்டுல பல பொண்ணுங்களுக்கு சரியா புடவை கட்டத்தெரியாதுன்னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியப்படுத்தின விஜய் டிவியை என்ன பண்ணலாம்?!

Thursday, December 23, 2004

படக்கோப்பு

மேல்Kind அங்கத்தினர்களின் படங்களைப் பார்த்திராதவர்கள் பார்த்து பரவசப்படவும், ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கவும் இப்பதிவு சமர்ப்பிக்கப்படுகிறது.


Saturday, December 18, 2004

ப்ளாகர் பின்னூட்டம்-நினைவிருக்கும் வரை

ப்ளாகரில் anonymous பின்னூட்ட வசதி செய்து கொடுத்து சுரதாவின் எழுத்துரு மாற்றியை இணைத்து வைத்திருக்கும் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு சின்ன tip.

Haloscan போன்ற இலவச பின்னூட்ட சேவைகளிலெல்லாம் பின்னூட்டம் அளித்தவரின் பெயர், மின்னஞ்சல்/வலைப்பதிவு முகவரியை நினைவில் தக்க வைத்திருக்கவும் ஒரு வசதி இருக்கும். அதே மாதிரி Blogspotலயும் பண்ணணும்னு நெனச்சா...

பின்னூட்டப் பெட்டி இருக்கும் இல்லையா, கமெண்ட் பகுதியில்...? அதுல கீழ்க்காணும் வரியைச் சேர்க்கணும் மொதல்ல.


<input type=checkbox name="ninaivilvai"> <font size=-4>neeyaavadhu ngyaabagam vechchukko</font>


ஆச்சா... அடுத்ததா <script> tag க்குள் கீழ்க்காணும் வரிகளைச் சேர்க்கணும்.


function nirappu(){
for(lngStart=0;lngStart{
try{
if(GetCookie("username")!==null) document.forms[lngStart].strName.value=GetCookie("username")
if(GetCookie("url")!==null) document.forms[lngStart].strURL.value=GetCookie("url")
document.forms[lngStart].ninaivilvai.checked=true
}
catch(err){
}
}

}
function SetCookie (name, value) {
var argv = SetCookie.arguments;
var argc = SetCookie.arguments.length;
var expires = (argc > 2) ? argv[2] : null;
var path = (argc > 3) ? argv[3] : null;
var domain = (argc > 4) ? argv[4] : null;
var secure = (argc > 5) ? argv[5] : false;
document.cookie = name + "=" + escape (value) +
((expires == null) ? "" : ("; expires=" + expires.toGMTString())) +
((path == null) ? "" : ("; path=" + path)) +
((domain == null) ? "" : ("; domain=" + domain)) +
((secure == true) ? "; secure" : "");
}


function getCookieVal (offset) {
var endstr = document.cookie.indexOf (";", offset);
if (endstr == -1)
endstr = document.cookie.length;
return unescape(document.cookie.substring(offset, endstr));
}


function GetCookie (name) {
var arg = name + "=";
var alen = arg.length;
var clen = document.cookie.length;
var i = 0;
while (i < clen) {
var j = i + alen;
if (document.cookie.substring(i, j) == arg)
return getCookieVal (j);
i = document.cookie.indexOf(" ", i) + 1;
if (i == 0) break;
}

return null;
}


அப்பறம் <body> அப்படின்னு இருக்கறதை <body onload="nirappu()"> அப்படின்னு மாத்திடணும். அவ்வளவுதான் இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் பாக்கி.

AddName அப்டீன்னு ஒரு ·பங்க்ஷன் இருக்கும். இருக்கா? அதுல

else {
form.postBody.value ......
மாதிரி வரிகள் இருக்கும். அந்த வரிகளுக்கு பதிலா கீழ இருக்கறதை அப்படியே பேஸ்ட் பண்ணிட்டா முடிஞ்சது:


else {
form.postBody.value = form.postBody.value + '\n\n' + 'By: <a href="' + form.strURL.value + '">' + form.strName.value + '</a>';
if(form.ninaivilvai.checked)
{
var expdate = new Date ();
expdate.setTime(expdate.getTime() + (24 * 60 * 60 * 1000 * 31));
}
else
{
var expdate = new Date ();
}
SetCookie("username",form.strName.value,expdate,"/")
SetCookie("url",form.strURL.value,expdate,"/")
return true;

Saturday, December 11, 2004

குட்டிச்சுவர் சிந்தனை 'முத்துக்கள்'

விருப்புவெறுப்பு ஏதுமின்றி வெளியிடப்படும் ஒரு ஆராய்ச்சி முடி: (ஹீ, ஹீ, ஆராய்ச்சி முடிவுல மட்டும்தான் விருப்புவெறுப்பு இல்லை, ஆராய்ச்சில அதெல்லாம் இருக்கும்)


1) 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்பது சிவாஜிக்கு சொல்லப்பட்ட வசனம்.
2) பேருந்தில் நிறைய பெண்கள் என்னைத் திட்டித்திட்டி பொங்கி எழுகிறார்கள்
3) எனவே நிறைய பெண்கள் சிவாஜி ரசிகர்கள்



1) ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.
2) பல போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி கிடைக்கிறது
3) எனவே பின்னாலிருக்கும் பெண் ஒரு போராட்டம்



1) வீட்டில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்குவது தொழில் முன்னேற்றத்தைப் பெருக்கும்-வாஸ்து சாஸ்திரம்
2) நம் பணியகத்தை நம் சொந்த வீடு போல் மதிக்க வேண்டும்
3) எனவே பணியகத்தில் கிழக்குமுகமாகப் படுத்து உறங்கலாம்



1) எனக்கு குடியரசுத்தலைவரின் அறிவுரைகள் பிடிக்கும்.
2) 'கனவு காணுங்கள்'-குடியரசுத்தலைவர்
3) ஒரு மனதுக்குப் பிடித்த ஸ்பெஷல் "அவங்க" என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கடந்தார்கள்