Saturday, October 30, 2004

இந்தப் பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்

இடம்: அகில உலக ஆண்கள் முன்னேற்ற சங்கம்
அமர்வு: குட்டிச் சுவர்
வேளை: சாயங்காலம்
வேலை: வெட்டி

பேச்சுலர்கள் வழக்கம் போல வெட்டியாகக் கதைத்துக்கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில் ஒரு சங்க காலப் பாடல் வசமா மாட்டிச்சு. அந்தப் பாட்டோட மேட்டர் இதுதான்:

பொருள் தேடலுக்காக காதலியைப் பிரிந்து காதலன் வேற்றிடம் சென்று விட, பிரிவு தாளாது தவித்தாள் அந்தக் காதலி. அவன் போன ரூட்டு ஒரே காடு. ரொம்ப ஹீட்டு. அதோட பாம்பு, பள்ளி, தேள், பூரான், க்ருபா எல்லாம் வழி முழுக்க. அதுங்களால எல்லாம் தன் காதலனுக்கு ஒன்னும் நேராம இருக்கணும்னு நெனைக்கறா. பக்கத்துல இருக்கற தன் தோழிக்கு செல்ஃபோன் போட்டு பேசறா. சாமிகிட்ட வேண்டிக்கலாம்னும் ஃபெரெண்ட்கிட்ட சொல்றா. ஆனா அப்படி சாமிகிட்ட வேண்டிக்கறது தன்னோட கற்புக்கு ஏற்புடையதா இருக்காதே, என்ன பண்றதுன்னு ரொம்ப வருந்தினாளாம்.


"இதுக்கும் கற்புக்கும் என்ன சம்பந்தம்"ன்னு இளைய பேச்சுலர் ஒர்த்தர் திருதிருன்னு முழிச்சார்.

ஆனால் ஒரு முதிய பேச்சுலர் அதன் உட்பொருளை விளக்கினார்.

"கணவனே தெய்வம்னு நெனைக்கற பொண்ணுபா அது. இப்போ புரிஞ்சதா?"

என்ன இருந்தாலும் அந்தக்காலத்து பொண்ணுங்க அவ்வளவு அன்பாவா இருப்பாங்கன்னு ஒரு பேச்சுலர்க்கு ஒரே ஆச்சர்யம். சரி, என்னவோ! அப்படி நெனச்ச பொண்ணோட வயசு என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் அதிகமாச்சு அந்த பேச்சுலர்க்கு.

குட்டிச் சுவரை விட்டு தடாலென்று தெருவில் குதித்தார் பேச்சுலர். மடமட வென்று போகும் வரும் பெண்களிடமெல்லாம் ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டு சர்வே எடுக்க ஆரம்பித்தார். கிடைத்த 'அன்பு' அர்ச்சனைகள், வாங்கிய செருப்படிகள் எல்லாம் போக தேறிய பதில்களு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த சங்கப் பாடலின் பொருளை ஒரு கதையாகச் சொல்லி கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:

"தன் காதலனுக்காக கடவுள்கிட்ட அந்தப் பொண்ணு வேண்டிக்காத காரணம் சரியா, சரியில்லையா?"

இந்தக் கேள்விக்கு அந்த சங்ககாலப் பொண்ணு மாதிரியே பதில் எந்தப் பொண்ணு சொல்றாளோ அவ வயசுதான் சங்ககாலப் பொண்ணுக்கு. இதுதான் திட்டம்.

சரி, இப்போ கிடைத்த பதில்கள் (துல்லியமான வயது தெரியாததால, பதில் சொன்ன பெண்களின் வயசு ரேஞ்ச் மட்டும் குத்து மதிப்பா):

18-24: "அந்தப் பொண்ணு பண்ணினதுல என்ன தப்பு? 'காதலன்'னு தானே சொன்னீங்க? கணவன் இல்லையே! ம்ம்ம், பாவம். அந்தக் காலத்துல எல்லாம் ஒரு பொண்ணுக்கு ஒரே ஒரு பாய்ஃப்ரெண்ட்தான் போலருக்கு"

25-30: "திருமணமாகி கணவரைப் பிரிஞ்சு இருக்கறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு சொன்னாப் புரியாது." (கொஞ்சம் முகபாவத்தை மாற்றிக்கொண்டு) "It's something to be realized by experience. Ohwmegwaad! Terrible. You see, itz like, like... really awesome. Ever read Sydney Sheldon's...?" (மேலும் தொடர்ந்த 'மேரி'யின் அறிவுப் பிரதிஷ்டை தாங்க முடியாததால் கேள்விகேட்ட பேச்சுலர் ஓடி ஒளிய வேண்டியதாப் போச்சு)

31-37: "அந்தப் பொண்ணுக்கு குழந்தைகள் பற்றிய கவலைதானே இருக்கணும்? கணவரைப் பத்தி கவலைப் பட என்ன இருக்கு?"

38-45: "நல்லா புரிஞ்சது. அந்தப் பொண்ணோட வயசைக் கண்டுபுடிக்கணும்னுதானே இதையெல்லாம் கேக்கறீங்க? ஒரு பொண்ணோட வயசைப் பத்தியெல்லாம் ஏன் யோசிக்கறீங்க? அந்த பாட்டு நல்லா இருந்ததா? அதோட கருத்து உங்களுக்குப் புரிஞ்சதா? அவ்வளவுதான்."

46-55: "பெண்களைப் பொருத்த வரை கணவன் தெய்வம்தான். அப்படித்தான் ஆண்கள் பெண்ணாதிக்கம் பண்றாங்க. கல்லுல இருந்தாலும் தெய்வம் தெய்வம்தான். கல்லாவே இருந்தாலும் கணவன் கணவன்தான்னு தானே பெண்களை அடிமைப் படுத்தி வெச்சுருந்தாங்க? ம்ம்ம், சரி என்ன கேட்டீங்க? ஓ... அந்தப் பொண்ணு பண்ணினது..ம்ம்ம். இல்லைங்க, அப்பறமா சொல்றேன், வீட்ல என் கணவர் வத்தக் குழம்புக்கு அரிசி அப்பளாம் சுட்டு வெச்சாரா இல்லையான்னு தெரியலை. இன்னொரு நாள் சொல்றேனே, இப்போ போகணும்."

56-65: --இந்த வயதுக்குள் யாரும் கிடைக்கவில்லை--

66-85: "அந்தப் பொண்ணு பண்ணினது எப்படிப் பாத்தாலும் ரொம்ப சரி. ஏன்னா, கடவுள்கிட்ட வேண்டி ஒரு வேளை அவள் கணவன் நிஜமாகவே காப்பாற்றப்பட்டு விடும் அபாயம் இருக்கு."

பெண் எந்த வயதில் தெய்வமாக மதிக்கிறாள் கணவனை என்று இதில் முதலில் அறிய வேண்டும். இப்பொழுது மணி இரவு 2:30 ஆகிவிட்டது. ஆராய்ந்து கண்டுபிடித்து ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கும் முன்னரே அவசர அவசரமாக நடந்த வரை தட்டச்சடித்து, இணையத் தொடர்பு ஏற்படுத்தி, மேல்Kindக்கு அனுப்பி வைத்து...

2 comments:

Anonymous said...

எவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு சர்வே எடுத்து இருக்காங்க? எல்லோரும் கருத்து சொல்லாம போறீங்க.....

By: மோகன்By: மோகன்

Anonymous said...

//66-85: "அந்தப் பொண்ணு பண்ணினது எப்படிப் பாத்தாலும் ரொம்ப சரி. ஏன்னா, கடவுள்கிட்ட வேண்டி ஒரு வேளை அவள் கணவன் நிஜமாகவே காப்பாற்றப்பட்டு விடும் அபாயம் இருக்கு"// ரொம்பவே அனுபவிச்சிட்டாங்க போல இருக்கு!!

அது சரி எப்பத்தான் மனைவியே மனம்+கண்கண்ட தெய்வம் ஆகிறது?

By: shreya