Thursday, February 02, 2006

தப்பித்த தவளைகள்

மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா அழைப்பு
------------------------------------

கூடிய சீக்கிரம் என்னை பலிகொடுக்கும் திருவிழா நடக்கவுள்ளதால், கழுத்து வெட்டும்முன் மஞ்சள்நீர்த் தெளிப்பு விழா, நிகழும் பார்த்திப ஆண்டு ·பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதுதான் எனக்கு முதல் நிச்சயதார்த்தம் என்பதால் எப்படி வரவேற்க வேண்டும் என்று தெரியவில்லை. பத்திரிக்கை ஏதும் நிச்சயதார்த்தத்திற்கென்று தனியாக அச்சடிக்காததால் இந்த மடலையே கவிதையாக, மன்னிக்கவும், பத்திரிக்கையாக நினைத்துக்கொள்ளவும்.

காந்தி லால் ஜெயின் திருமண மண்டபம்
கோடம்பாக்கம் ரோடு
மேற்கு சைதை
சென்னை

மேற்குறிப்பிட்ட வரிகள் நிச்சயம் கவிதை முயற்சி அல்ல என்பதையும், மஞ்சல்நீர்த் தெளிப்பு விழா (அதான், ஆட்டை வெட்டறதுக்கு முன்னாடி ஏதோ தெளிப்பாங்களாமே) நடக்கும் பலிபீடம்.... வந்து,திருமண மண்டபம்தான் என்றும் உறுதி கூறுகிறேன்.

மேலும், 4:00-5:30க்குள் நடக்கும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

தாங்கள் தங்கள் சுற்றமித்ர பந்துக்களுடன் புடைசூழ வந்திருந்து மரபுக்கவிதை வாசிக்கவேண்டுமாய்....இல்ல இல்ல, தப்பா சொல்லிட்டேன்... மரபுப்படி ஆசிர்வதிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
ஆடு (எ) sheep (எ) பக்ரா (எ) Krupa Shankar

*************************************************************************************

நிச்சயதார்த்த விழா அழைப்பு
=======================

('திருமண ஒப்பந்த விழா'ன்னு தமிழில சொல்லலாமா?)

வருகிற வெள்ளிக்கிழமை (03-02-2006) அன்று நடைபெற உள்ள எனது நிச்சயதார்த்த விழாவுக்கு நண்பர்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இடம்: அன்னப்ப ராஜா திருமண மண்டபம்,
·பாரஸ்ட் ரோடு, பங்களா மேடு, தேனி.

நாள்: 03-02-2006

நேரம்: மாலை ஐந்து மணி தொடங்கி ஆறு மணிக்குள்

உங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து எங்கள் இல்லறம் சிறக்க இருவரையும்
வாழ்த்தினால் மகிழ்வோம்.

திருமணம், வைகாசி மாதத்தில் (ஜுன் 2006) நடைபெறக் கூடும் என்று நம்பத்
தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமண நாள் உறுதி செய்யப்பட்டதும்
தெரிவிக்கிறேன். அதற்கும் இம்மடல் மூலம் ஒரு நிற்கும் அழைப்பு (standing
invitation!!) இருப்பதாகக் கருதிக் கொள்ளவும்.

உங்கள் ஆசிகளை எதிர்நோக்கும், -- மீனாக்ஸ் & சுபா

6 comments:

Anonymous said...

அங்கலாய்த்த பேச்சுலர் ஜெ.ரஜினி ராம்கி?!

:-)

Anonymous said...

வாழ்க! வளர்க!.. :-(

By: raasaa

Pavals said...

வாழ்க! வளர்க!.. :-(

Anonymous said...

வாழ்த்துகள் கிருபா ஷங்கர்

--
ராம்கி, இது எதுவும் ஓரங்கட்டேய் மாதிரி டகால்டி மேட்டரா மட்டும் இருந்துச்சு!! அப்புறம் மாயவரத்துக்கு மிக்-29 அனுப்பப்படும்னு அன்புடன் எச்சரிக்கிறேன்!

Anonymous said...

16-um peRRu peru vaazvu vaazka !

Anonymous said...

கடைசி மிக் பின்னூட்டம் நம்முடையது.. ஆனா பெயர ஸ்வாஹா பண்ணிடுச்சு ப்ளாக்கர்.


ராம்கிக்கு விட்ட எச்சரிக்கை still standing!

அன்புடன்,
இராமநாதன்