" "என் கணவருக்குத் தங்கமான மனசு" "அப்படியா?" "ஆமாம். நேத்து கூட அன்பா 'துஷா துஷா, உன் கை தவறி விழுந்தாலும், என் தலைல பட்டதாலதான் அந்த சப்பாத்திக்கட்டை உடைஞ்சது. அழாதே'ன்னு சமாதானப்படுத்தினார்." |
"உங்க கணவரோட ரொம்பநாளா குடித்தனம் நடத்தறீங்க போலருக்கே!" "எப்படி நெல்வசாயகி கண்டுபுடிச்சீங்க?" "வாசல்ல 'நாய் ஜாக்கிரதை'ன்னு போர்டு வெச்சுருக்கீங்களே, அதான்." |
"யெஜந்தி, எல்லாப் பெண்களும் சேர்ந்து படம் எடுத்த என்னபடம் வைப்பாங்க?" "மண்மதி" |
"ஒரு வேலையுமே செய்யாம இப்படி வீட்ல மரமா ஆன மாதிரி இருக்கியே? உன் கணவர் ஒன்னும் சொல்றதில்ல?" "மரம் என்ன மரம்! நான் புல்லே ஆனாலும் அவர் புருஷன்தானாம்" |
"என்ன, உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையே வராதா? அது எப்படி?" "யோவ், நான் கோழியர் சங்க வாட்ச்Man. போ வெளில!" |
கோழி என்ற ஒரு சொல் மேல்Kindஇல் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, "கழுதைகளைப் பற்றி சில உண்மைகள்" போன்று தலைப்பிட்டு ஏதேனும் அங்கதங்கள் கோழியர்ப்பதிவில் இடம்பெறலாம். தொடர்ந்து பல்லி, பூரான், வௌவால், நட்டுவாக்கிளி ஆகியவைகளைத் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றியும் அலசப்படும்.
9 comments:
ரொம்ப க்ரியேடிவ்பா நீங்கள்ளாம் ,.. நிறைய கத்துக்கணும் உங்ககிட்டயிருந்து,..ம்,.. ரசிச்சேன். துளியும் சம்பந்தமேயில்லாம என்னோட பேர இழுத்திருந்தாலும் கூட.. சும்மா ஜாலிக்குதானேன்னு புரியறதால ரசிக்கமுடியறது ,..உங்களோட க்ரியேடிவிடியைப் பாராட்டாம இருக்க முடியல்ல,.. பிடியுங்கள் பாராட்டுக்களை !
ஒரே ஒரு தாழ்மையான யோசனை,.. இவ்வளவு திறமைய நீங்கள்ளாம் வேற ஆக்கபூர்வமா ஏன் பயன்படுத்தக்கூடாது,எதுக்கு இந்த அனாவசிய சச்சரவுன்னு தான் புரியல்ல,.. இப்ப மீனாக்ஸ் என்ன பெரிசா யாரும் சொல்லாததச் சொல்லிட்டார்,.. இல்ல உஷா தான் சீரியஸா என்னத்த எழுதிட்டாங்க? ..அன்புடன், ஜெயந்தி
மேல சொன்னது உண்மையில் அக்கறையிலதான். தப்பா எடுத்துக்க வேண்டாம்,..
என்றும் அன்புடன் ஜெயந்தி.
:))
By: Mathy Kandasamy
:-(((
By: thoozi
என்னங்க ஜெயந்தி துளியும் சம்பந்தமில்லாம? எதிர்க்கட்சிக் கூட்டணில இருந்து இப்படி எல்லாம் பேசக்கூடாது.
உங்க பேரை இழுத்தாலும் ஏதோ டீஸண்ட்டான ரோலாதானே குடுத்தேன். :-(( உஷான்னா மட்டும் கொஞ்சம் தைரியமா களாய்க்கலாம். அவங்களும் இன்னொரு சான்ஸ் கடைச்சா பதிலுக்கு களாய்ப்பாங்க எப்ப்வும். (இந்த வாசகத்தை உஷா படிக்காமல் இருக்கணுமே, இறைவா!)
அப்பறம் நீங்க எழுதின முதல் மறுமொழியின் இரண்டாவது பத்தி என்னால படிக்கவே முடியலை. அதுல மட்டும் எழுத்துரு ப்ரச்சனை. ;-)
இரண்டாவதாக நீங்க சொன்ன பின்னூட்டத்துக்குப் பதில்...நான் தப்பா எடுத்துக்கறேனா இல்லையான்னு எனக்குத் தெரியலை. ஆனால் Unrelated Linksல் உங்கள் பதிவின் சுட்டியைச் சேர்த்திருப்பதை வைத்து நீங்களே முடிவு பண்ணிக்கோங்க (டெம்ப்ளேட்ல சேர்ட்திருக்கேன், அடுத்த பதிவில் இருந்து தெரியும்).
ஆஹா, நானும் "என் விவரம் கீழே"வை டிக் பண்ணாம விட்டுட்டேன். க்ருபா, கலக்கறே போ!
By: S Krupa Shankar
'கீர்'பா,
இப்டி 'தில்'லா போட்டுக்கொடுத்திட்டீயே... கழுதையை விட மோசமான பேரேல்லாம் லிஸ்ட்டுல இருக்குதே... செத்தோமடா சாமி!
By: Rajni Ramki
இன்னிக்கிதான் பார்த்தேன் பேரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு ஷங்கர் இல்லப்பா,. சங்கர் ,.. பேர சரியாப்போடுங்க,..unrelated லிங்ல உள்ளதத்தான் சொல்றேன்,.. : ))))))
By: jayanthi sankar
சரி, சரி, சரி. சங்கர்ன்னே மாத்திட்டேன்.
வால்துண்டு: ம்ம்ம், என் தம்பிக்கும் 'சங்கர்'ன்னுதான் பேர் முடியும்.
By: S Krupa Shankar
Post a Comment