--------------------
'அ' வரிசையில் காணப்படும் சொற்களுக்கு மிகப்பொருந்தக்கூடிய வார்த்தைகளை 'ஆ' வரிசையிலிருந்து தேர்ந்த்டுக்கவும்.
எண் | அ | ஆ |
---|---|---|
1 | அன்புள்ள | மனைவி |
2 | டேய் | ஆசிரியர் |
3 | ப்ரியமான | அம்மா |
4 | மதிப்பிற்குரிய | நண்பன் |
5 | அடியேய் | காதலி |
Re-arrange jumbled words (1 x 10=10)
-------------------------
கீழ்க்காணும் வாக்கியத்தின் வார்த்தைகள் சற்று குழம்பியுள்ளதால் மாற்றுபொருள் தருகிறது. அதைத் திருத்தி அமைத்து சரியான பொருள் காண்க:
கண்ணே நேற்று இரவும் மின்சாரம் இல்லை. தூங்கும் உன் அப்பாவைப் பார்த்துத் தாக்கி பணம் வாங்கித் தா; பில் கட்ட வேண்டும். பிறகு நாளை மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் முத்தமிட்டுக் கொள்கிறேன்.
Odd word out (5 x 4 = 20)
------------
கீழ்க்காணும் வரிகளில் ஒவ்வொரு நான்கு வார்த்தைகளிலும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் மற்ற மூன்றுடன் பொருந்தாமல் உள்ளது. அவ்வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்
1) புத்திசாலி, பகுத்தறிவு, விவேகம், காதல்
2) நிம்மதி, அமைதி, திருமணம், சாந்தம்
3) லவ்லட்டர், உழைப்பு, உயர்வு, முன்னேற்றம்
4) வெட்கம், மானம், அரியர்ஸ், கவரிமான்
5) தெனாவெட்டு,கிண்டல், இளமை, மூப்பு
விடைகள்
---------
Match the following:
அன்புள்ள=அம்மா, டேய்=நண்பன், ப்ரியமான=காதலி, மாதிப்பிற்குரிய=ஆசிரியர், அடியேய்=மனைவி
Jumbled Words:
கண்ணே, நேற்று இரவும் உன் மின்சாரப் பார்வைத் தாக்கி தூக்கம் இல்லை. நாளை முதலில் பார்த்துக்கொள்ளலாம், முத்தமிட்டு மருத்துவம் தா. உன் அப்பாவைப் பிறகு பார்த்து பில் கட்டிக் கொள்கிறேன்.
Odd word out:
1=காதல், 2=திருமணம், 3=லவ்லட்டர்,4=அரியர்ஸ்,5=மூப்பு
2 comments:
அட அட அட!! என்ன அறிவு!!..பொதுப் பரீட்சைகளுக்கு வினாக்கள் அமைக்கும் தொழில் ஆரம்பித்து விடலாம்...
என்ன..இப்பிடி காதல் ..கீதல் என்று எல்லாம் போட்ட கூடவே பாண்டேஜும் (bandage)போட்டுக் கொள்ள வேண்டியது தான்!!
By: ஷ்ரேயா
இன்னாப்பா இது. "மனசுக்கு புடிச்சவங்க" பத்தியெல்லாம் எழுதிட்டு இப்படி anti-climax கேள்விகள் கேட்கிறீங்க? Out of syllabus. :)
By: nandha
Post a Comment