நம்ம கேவியாரு இருக்காரு பாருங்க, அவரோட வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டத்துல இருக்காரு. கூடிய சீக்கிரம் happyயான பேச்சுலர் ஸ்டேஜில இருந்து /your own adjective here/யான பேச்சிலர் ஸ்டேஜுக்குப் போறாரு. போறதுக்கு முன்னால ஒரு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து உங்களுக்கெல்லாம் வழி காட்டிட்டுத் தான் போவேன்னு ஒரே அடம். அவருக்கு மேடை போட்டுக் குடுக்குறதில மேல்Kind குழுவுக்கு ரொம்பப் பெருமை.
(அப்புறம், அவரோட கட்டுரைக்கு நடுநடுவில சேப்புக் கலர்ல கமெண்ட் விட்டிருக்கிறது மட்டும் நாங்க. ஏதோ, எங்களால முடிஞ்ச ஒரு கைங்கரியம்!!)
-o0o-
ஒருதலை ராகங்கள்
ஒரு மனுஷனுக்கு கொஞ்சம் தில் இருக்கலாம், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்துட்டா இப்போ நான் செய்யிற காரியம் மாதிரி தான் செய்விங்க. வர்ற இருவத்தெட்டாந்தேதி நிச்சயதார்த்தத்தை வச்சிக்கிட்டு எவனாவது தன்னோட ஒருதலை ராகங்களை பாடுவானா? இதோ நான் பாடப்போறேன். ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ....
ஒரு பையன் சைட் அடிப்பதில் கூட ஒரு வரைமுறை வைத்து சைட் அடிச்சா நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு அது புரியவே மாட்டேங்குதுப்பா. அது என்னடா வரைமுறைன்னு கேக்குறிங்களா??, நான் ஒரு பொண்ணை சைட் அடிக்கிறப்போ வேற யாரையும் சைட் அடிக்க மாட்டேன். சைட் அடிக்கிறதுல கூட ஒரு கற்பு நெறிய follow பண்றவன் நான்.
சாலமன் பாப்பையாவைக் கூப்பிடுங்கப்பா. பட்டி மன்றம் வச்சு முடிவு பண்ணிடலாம் - கற்பில் சிறந்தவர் கண்ணகியா? கே.வி.ஆரா?
சரி, இவ்ளோ கற்போட (!!!??!!) ஒருத்தன் நமக்காக ஏங்குறானேன்னு நினைச்சு ஒரு பொண்ணாவது green signal காட்டினாங்களா?? அதுவும் இல்ல. நமக்கு ஒரு ராசி இருக்கு, நான் யாராவது ஒருத்தரை (அதாவது ஒருத்தியை) சைட் அடிக்க ஆரம்பிச்சா, அந்த பொண்ணு வேற ஒருத்தனுக்கு engage ஆய்டும் (இல்லைன்னா already engaged ன்னு தெரியாம நான் சைட் அடிச்சிருப்பேன்).
இதையெல்லாம் பத்தி பேசிகிட்டு இருக்குறப்போ ஒரு நாள் என் தங்கை "அண்ணா, கன்னி ராசி இருக்குறவங்கள பொண்ணுங்க சைட் அடிப்பாங்க, friendஆ இருப்பாங்க, ஆனா லவ் மட்டும் பண்ணமாட்டாங்க"ன்னு சொல்லுச்சு, யோசிச்சு பார்த்தா உண்மை தானோன்னு தோணுது.
ஹா.. ஹா.. ஹா.. - கன்னி ராசிக்காரர்களைப் பார்த்து மற்ற ராசிக்காரர்கள் சிரிக்கும் வெடிச்சிரிப்பு.
சரி, இந்த மாதிரி அழிச்சாட்டியங்களைல்லாம் எப்போடா ஆரம்பிச்சன்னு கேட்டா?? teen ageன்னு எந்த புண்ணியவான் வயச நிர்மாணிச்சானோ தெரியல, கரெக்டா சைட் அடிக்கிற புத்தி சொல்லாம கொள்ளாம தானாவே வந்துடுச்சு. அதுலியும் எங்கப்பா, என்னை எப்பவுமே co-edல தான் படிக்க வச்சாங்க (எவ்ளோ பெரிய நல்ல காரியம் தன்னோட பையனுக்கு செய்யுறோம்ன்னு தெரியாமலே செய்துட்டாங்க).
ஏழாவது படிக்கிறப்போ பக்கத்து வகுப்பு பொண்ணு, கலைக்கழக போட்டிக்காக "சூதர்மனைதனிலே அண்ணே... தொண்டு மகளிருண்டு, சூதிர் பணயமென்றால் அங்கோர் தொண்டச்சி போவதில்லை"ன்னு practice பண்றப்போ "அடடா, என்னமா பேசுறா பாருடா"ன்னு ஆரம்பிச்ச நம்ம சைட் செ்ஷன் காலேஜ் முடியுற வரைல ஒரு non-stop actionஆ நடந்தது.
அந்த "சூதர்மனை" பொண்ணை நான் சைட் அடிச்சப்போ என் friend இஸ்மாயில் வந்து ஒரு நாள் "மச்சான், நானும் அவளும் ரொம்ப closeடா, ஆனா அவ அப்பா எங்க கல்யானத்துக்கு என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு"ன்னு சொன்னான் (பிஞ்சில பழுக்குறதுன்னா இதான்).
கேட்டீங்கள்ல நியாயத்தை? ஏழாவது படிக்கும்போது சைட்டடிச்ச இவரு பிஞ்சில பழுக்கலையாம். அந்த friend மட்டும் தான் பிஞ்சில பழுத்தவராம். நல்லா இருக்கே கதை.
அட தேவுடா, நம்ம சைட் அடிக்கிற பொண்ணு இவனோட ஆளா?? தப்பு பண்ணிட்டோமேன்னு நினைச்சு மனசுலேர்ந்து தூக்கி எறிஞ்சுட்டேன். இப்டியே ஏழாவது போய்டுச்சு.
எட்டாவது வந்தப்போ எங்கப்பா இனிமே பையன் நம்ம கட்டுப்பாட்டில இருக்கட்டும்ன்னு நினைச்சாங்களோ என்னமோ (வெளில இருந்தா கெட்டு போய்டுவேனோன்னு பயந்து), அவங்க ஸ்கூலுக்கே என்னை மாத்தி கொண்டுவந்துட்டாங்க. எட்டாவது வந்ததும் நான் ரொம்பவே படிக்கிற பையனாய்ட்டேன். அப்படி இருந்தாலும் நம்மள விதி சும்மா விடுதா, அதான் இல்ல. நான் ஆர்வக் கோளாறுல பாடத்தை ஒப்பிக்கிறதையும், கணக்குல்லாம் ரொம்ப வேகமா போடுறதையும் பார்த்து நம்மள ஒரு பொண்ணு அப்பப்போ பார்த்துகிட்டே இருக்கும். நமக்கு இங்க ஜிவ்வுன்னு ஆய்டுச்சு. ஒவ்வொரு தடவையும் வாத்தியார் கிட்ட ஒப்பிச்சுட்டு உக்காரும்போது நம்மாளு பார்க்கிறாளான்னு ஒரு look விட்டுகிட்டு confirm பண்ணிக்குவேன். கிராமத்து பள்ளிக்கூடம், அதனால பொண்ணுங்க கிட்ட பேசினா வாத்தியார் உதைப்பாரோன்னு பேச எல்லாம் தைரியம் வந்ததில்ல. இப்டி dreamல போய்கிட்டு இருந்த நம்ம காதல் (ஒவ்வொரு தடவை சைட் அடிக்கும்போதும் அது தான் காதல்ன்னு நினைச்சுப்பேன், அது புட்டுகிச்சின்னா சே சே இது இனக்கவர்ச்சின்னு ஒதுக்கிடுவேன்) ஒரு நாள் ரோட்ல யாரோ ஒருத்தன் கிண்டல் பண்றான்னு (யார் அந்த வில்லன்னு தெரியல) அந்த பொண்ணு வீட்டுல complain பண்ண, அந்த பொண்ண பள்ளிக்கூடத்த விட்டே அவங்க வீட்டுல நிப்பாட்டிட்டாங்க.
9, 10வதுல்லாம் படிப்புல கொடிக்கட்டி பறந்த காலம். எனக்கும் இன்னொரு பையனுக்கும் யார் first rank வாங்குறதுன்னு பயங்கர போட்டி, அவன் வேற பழம் கேஸ். சரின்னு தீவிரமா போட்டில இருந்த காலம். ஒரு தடவை, சிதம்பரம் சுத்து வட்டாரத்துல இருக்குற எல்லா ஸ்கூலுக்கும் ஒரு கணக்கு போட்டி நடந்துச்சு. அதுல நம்ம first வந்தாச்சு. நியூஸ்பேப்பர்ல எல்லாம் photo வந்துச்சு (எங்கப்பா, நான் state first வாங்கி பேப்பர்ல photo வரணும்னு கண்ட கனவை நான் 4 மாசம் முன்னாடியே நிறைவேத்திட்டதால state first வாங்கவேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்). ஸ்கூல்ல ப்ரேயர்ல வச்சுல்லாம் பாராட்டினாங்க. அந்த நேரத்துல ஒம்பதாவது படிச்ச ஒரு பொண்ணு எனக்கு 5star மாதிரி ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்லிச்சு. அன்னைலேர்ந்து, "மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி" கணக்கா சைட் அடிக்க ஆரம்பிச்சேன். அந்த பொண்ணா வந்து சாக்லேட் கொடுத்தாலும் அதுக்கு அப்புறம் பேசுற தைரியம் எனக்கு வரல (இங்கே ஒரு விஷயம் சொன்னா நம்புவிங்களா, நான் பொண்ணுங்க கிட்ட பேசவே கூச்சப்படற party). கொஞ்ச நாள் கழிச்சு நம்ம காதுக்கு ஒரு news வந்துச்சு, அந்த பொண்ணு வேற ஒருத்தனுக்கு engage ஆய்டுச்சு, அது பத்தாவது முடிச்சதும் அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போவுதுன்னு. அப்புறமென்ன, வழக்கம் போல "எங்கிருந்தாலும் வாழ்க" தான்.
கரெக்டா சொல்லுங்க தலைவா, அவங்க குடுத்தது சாக்லேட்டா, அல்வாவா?
+1, +2 சிதம்பரத்துல ஒரு ஸ்கூலுக்கு போய்ட்டேன். அங்கே நம்ம பேர் ஏற்கெனவே பாப்புலர் (எல்லாம் கணக்கு போட்டி செய்த மாயம், எங்கேயோ ஒரு பேர் தெரியாத பள்ளிகூடத்திலிருந்து வந்து பரிசைத் தட்டிகிட்டு போய்ட்டதால). அங்கே ஒரு பொண்ணு, நம்ம maths, chemistry notesல்லாம் அடிக்கடி வாங்கிட்டு போகும். பொண்ணு வேற பாக்குறதுக்கு நல்லா.. ரொம்ப நல்லா.. இருக்கும். நானும் வழக்கம்போல சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, நம்ம friend ஒருத்தன் 2 wheelerல வந்து கடலை போட்டு 1 வாரத்துல தேத்திகிட்டு போய்ட்டான். அதோட, சே படிப்புக்கெல்லாம் இந்த பொண்ணுங்க மசியாதுங்க, நம்ம நல்லா bodyய develop பண்ணனும், sportsல கலக்கினா தான் ஒரு ரசிகை பட்டாளமே கூட வரும்ன்னு நினைச்சு தீவிரமா உடம்ப தேத்த ஆரம்பிச்சேன். ஆனா, கடைசிவரை ஒன்ணும் நடக்கலை.
வருஷா வருஷம் ஊர்ல திருவிழா வர்ற மாதிரி இவருக்கு காதல் வந்திருக்கு பாருங்களேன்..!!
காலேஜ் வந்ததும் காதல் என்பதே சுத்த பொய், எல்லாம் மாயை, பொண்ணுங்க எல்லாம் டுபுக்கு கேஸுங்கன்னு இருந்தேன் (ஏன்னா, ஸ்கூல்ல நான் பார்த்த காதல் எல்லாமே அடுத்த வரு்ஷம் புட்டுகிச்சு). அதோட இல்லாம எங்க செட்ல வந்த பொண்ணுங்க எல்லாம் எனக்கு friendsஆ வேற ஆய்ட்டாங்க. நம்ம காதலுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி கூடுதல் மரியாதைய friendshipக்கு கொடுக்குற பார்ட்டி. அதனால, friendsஅ sight அடிக்கிறதில்ல. second year போனதும், ஜூனியர் செட்ல ஒரு அட்டகாசமான பொண்ணு வந்துச்சு. அவ வேற நான் அவங்க வகுப்ப கடக்கும்போதெல்லாம் ஒரு லுக் விட்டுகிட்டு இருந்தா (அவ ஏன் லுக் விட்டான்னு இதுவரை எனக்கு தெரியல). நம்ம தான் கண்டதும் காதல்ல பெரிய ஆளாச்சே, so ஒரே அடில knock out ஆய்ட்டேன். இந்த தடவை தான் என் friend ஒருத்தங்க கிட்ட ஒரு திடீர் ஞானோதயத்துல "இந்த வயசுல நான் லவ் அது இதுன்னு சொல்றேனே, இதெல்லாம் நல்லாதா"ன்னு கேட்டுவைக்க, அவங்க "பருவத்துல பன்னி கூட அழகா தான் இருக்கும்"ன்னு ஆரம்பிச்சு ஒரு 1 மணி நேரம் அட்வைஸ் மழையா பொழிஞ்சாங்க. அதுலேர்ந்து அவங்க கூட இல்லாத நேரத்துல மட்டும் சைட் அடிக்கிறதுன்னு பொழப்ப ஓட்டிகிட்டே இருந்தேன். அப்ப தான் நான் அதுவரை பண்ணாத ஒரு தப்பை செய்துட்டேன். இதுவரை சைட் அடிச்ச பொண்ணுங்களை பத்தி வெளில சொன்னதே இல்லை, ஆனா இந்த தடவை பசங்ககிட்ட உளறி வைக்க காலேஜ் முழுக்க நம்ம பேர் பிரபலம் ஆய்டுச்சு (இல்லைன்னா, அந்த பொண்ணு கிடைக்காத பட்சத்துல வேற ஒன்னை சைட் அடிச்சுருக்கலாம்). இதுல என்ன ஒரு கூத்துன்னா, இப்படி கனவுப் பட்டியல்ல இருந்த ஒரு பொண்ணுகிட்ட கூட நான் சரியா பேசினதே இல்ல, கடைசிவரை சொல்லவுமில்ல.
இப்போ, போட்ட ஆட்டங்களை எல்லாம் நினைச்சு பாக்குறேன். ஆண்டவன் எனக்கு சரியான தண்டனை தான் கொடுத்துருக்கான், இல்லைன்னா என்னை கொண்டுவந்து சவுதி அரேபியாவுல தள்ளுவானா????
ஆண்டவன் குடுத்த தண்டனைன்னு சவுதி அரேபியாவை சொல்றீங்களா? அல்லது நிச்சயதார்த்தத்தை சொல்றீங்களா? ஹி ஹி.. அய்யோ அடிக்க வராதீங்க கே.வி.ஆர்.!!
12 comments:
ஈஸ்வர ப்ரஸாத், இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தா அனுப்பி வைங்க, அந்தப்பக்கத்து வாததையும் (சோகத்தையும்) கேட்டுக்கறோம்.
//நான் ஒரு பொண்ணை சைட் அடிக்கிறப்போ வேற யாரையும் சைட் அடிக்க மாட்டேன். // ஐயோ தப்பு பண்ணிட்டியே நைனா ! தப்பு பண்ணிட்டியே ! :(...யாரவது ஒரு குதிரை மேல் பந்தயம் கட்டுவார்களா? ஒரே ஒரு லாட்டரி சீட்டு வாங்கினா பம்பர் அடிக்குமா? (வேலை தேடும்போது எப்படிபா செய்ரே?)
இந்த காலத்து பசங்களுக்கு ஒன்னுமே தெரியல்லியே சாமி !
தமிழ்
தமிழ்
By: testname
sorry for the comment
By: checking
ட்
By: s
Last checking. slow connection, midnight..sorry. will see tomorrow. bye!
By: test
கன்னி ராசி பற்றி கேவிஆர் அண்ணாத்தே சொன்னது அத்தனையும் உண்மை. நான் பார்த்த பெண்களுக்கு கூட ஒன்று இரண்டு மாதங்களுக்குள்ளாகவே கல்யாணமாகி அடிக்கடி தாடி வளர்த்து கொண்டிருந்தேன்.சமீப காலமாக நிரந்தர தாடியுடன்......:-)
By: ரா.சு
கன்னி ராசி பற்றி KVR சொன்னது உண்மைதான் ...
வருத்தத்துடன் (கொஞ்சம்தான்...!!),
ஒரு கன்னிராசிக்காரன்,
முத்து
வாழ்த்துக்கள் KVR.
"ஆட்டோகிராஃப்" பட ஸ்டைலில் எல்லா "லவ்"வையும் கல்யாணத்துக்கு அழைப்பீங்களா? ;o)
By: ஷ்ரேயா
கல்யாணத்துக்கு அப்புறம் சைட் அடிச்சதையும் (இதோட பார்ட் - 2 ?!) பதிவுல எதிர் பார்க்கலாமா? ;-)
By: கண்ணன் இராமநாதன்
ஷ்ரேயா, ஆட்டோகிராஃப் வந்ததுலேர்ந்து தோழிகளை திருமணத்திற்கு அழைக்கவே பயந்துகொண்டு இருக்கிறேன். நம்ம சும்மா நட்பில் அழைக்க அவங்களோட கணவர்கள் தேவையில்லாம எதுனா கற்பனை பண்ணிடுவாங்களோன்னு ஒரு பயம், இதிலே இவங்களை எல்லாமா? நான் இவங்க கூடல்லாம் ஒழுங்கா பேசினது கூட இல்லைங்க, ஆட்டோகிராஃப் வேற நம்ம கதை வேற.
கண்ணன் சார், நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கல்யாணத்துக்கு அப்புறம் இப்படில்லாம் பண்ணினா தூங்கும்போது தலைல கல்லை தூக்கிப் போட்டுடுவாங்க :-)).
Post a Comment