எல்லாப் பெண்களுக்கும் என்னைப் பிடிக்கிறது. (பொய்! அவளுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. வரவர ரொம்ப முறைக்கிறாள்.)
---
"ச்சோ ச்ச்வீட்"
"மச்சான்! எப்பயாவது பசங்களோட சுத்த கொஞ்சம் முயற்சி பண்ணுடா!"
"எங்கே செல்லும் இந்தப் பாதை..."
"டேய்! அவ ஏற்கனவே எங்கேஜ்டாமா"
"எனக்கு அடுத்த மாசம் பத்தாம் தேதி நிச்சயதார்த்தம்டா! அவர் ஐபிஎம்ல ப்ராஜக்ட் மானேஜர். சொன்னேனே! அது பிக்ஸ் ஆயாச்சு. உனக்கு இன்விடேஷன் எல்லாம் கிடையாது. கட்டாயம் வந்துடு"
---
நான் வாங்கிவந்திருப்பது சாபமா வரமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
---
அலுவலகத்தில் நந்தா என்று ஒருவன் இருக்கிறான். என்னைப் பார்த்தால் தண்ணீர் ஏறாத சென்னை மோட்டார் மாதிரி சீறுகிறான். அவளுக்காகத் தவமிருக்கிறான் (இந்த அவள் அந்த அவளல்ல. வேறெத்தனையோ அவள்களில் ஒரு அவள்). அவளுக்காக இடுப்பு சுற்றளவைவிட இரண்டு இன்ச்சு குறைந்த கால்சட்டைகளையெல்லாம் போட்டுக்கொண்டு முழுநேரப் பிராணாயாமத்தில் ஈடுபட்டிருக்கிறான். அவள் வீட்டிற்குக் கிளம்பக்கூடிய சாத்தியமுள்ள எல்லா நேரங்களிலும் அலுவலக ரிசப்ஷனில் எகனாமிக் டைம்ஸை முறைக்கிறான். அவள் என்னிடம் பேசுகிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக எனக்குப் புதுப்பேட்டையில் ஆட்டோ தயார் செய்துகொண்டிருக்கிறான்.
---
கல்லூரியில் ஒரு ஆசிரியர். அவர் பெயர் போஸ். அவர் பாடம் எடுத்தால் நாங்களெல்லோரும் பியூஸ். கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் இறுதித்தேர்வில் யார் முதல் மதிப்பெண் என்று அவருக்கு தோஸ்தான என் நண்பன் போய் அவரிடம் கேட்கிறான். அவருக்கு என் அடையாளம் தெரிகிறது. ஆனால் பெயர் மறந்துவிட்டது.
"அதாம்பா, ஒல்லியா வெள்ளையா இருப்பானே"
"யாரு சார், தெரியலியே!"
"நம்பர் 200034122"
"சார், என் நம்பரே எனக்கு சரியா தெரியாது, நீங்க வேற..."
"அட! அதாம்பா, எப்ப பாரு நாலஞ்சு பொண்ணுங்களோடயே சுத்திகிட்டு இருப்பானே"
"ஓ! அவனா! ஒக்கே ஒக்கே"
"அவன் பேரு என்ன?"
"ஷங்கர் சார்"
---
எங்கள் அலுவலகத்தில் எனக்குத் திருமணஞ்சேரி என்று பெயரிட்டிருக்கிறார்கள். நான் பார்வையை வீசும் எந்தப் பெண்ணுக்கும் அடுத்த சில தினங்களில் கண்டிப்பாகத் திருமணமோ நிச்சயமோ நடந்துவிடுகிறது. அவர்கள் என்னிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டால் இந்த சுபயோகத்தின் பலன் மேலும் அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
---
மேல்kind குழுவின் அங்கத்தினனாக என்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துக்கொள்கிறேன். இந்தக் குழு Priory of Sion மாதிரி பல நூற்றாண்டுகள் தழைத்தோங்கட்டும்! அதற்கு நேரெதிரான கொள்கையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு பணியாற்றாட்டும்!
வாயில்லாப் பிராணிகளுக்கு எனது வணக்கங்கள்!
5 comments:
புலம்பியவர்:
S Krupa Shankar:-)
சேரிய பதிவு.
தேரடி வீதி தேவத பூட்டா
பஸ்ட்டாண்ட் இருக்கு புரிஞ்சுக்கோ
டீக்கட வளைவில் மாமு புடிச்சா
லைசன்ஸ் ரெடி பண்ணிக்கோ
கவலைப்படாத அமுலு! பாவம், நீ ஒண்ணு நெனைக்க, தெய்வம் ஒண்ணு நெனைக்குது.
அது சரி, ஏன் கொஞ்ச நாளாவே எல்லா பதிவும் சிறுபத்திரிக்கை இஷ்டைல்ல எயுதற?
எங்கண்ணு அமுலு, அப்ப இந்த தளத்துக்கு சிஸ்டர் கன்சர்னா, www.suvadu-matrimony.com அப்படின்னு ஒண்ணு கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுடலாம்னு சொல்லு, என்ன?
//நான் பார்வையை வீசும் எந்தப் பெண்ணுக்கும் அடுத்த சில தினங்களில் கண்டிப்பாகத் திருமணமோ நிச்சயமோ நடந்துவிடுகிறது. //
:D :D
என் நண்பன் ஒருவனின் நிலமையும் இதே தான்..(என் வயசு)..இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்...ஜாக்கிரதபா அமுலு...
"அட! அதாம்பா, எப்ப பாரு நாலஞ்சு பொண்ணுங்களோடயே சுத்திகிட்டு இருப்பானே"
இருக்கட்டும். இருக்கட்டும். டிசம்பர்ல இந்தியா வரும்போது பார்த்துக்கறேன்!!
Post a Comment