Thursday, October 07, 2004

ஒரு பேச்சுலரின் டைரி வலைக்குறிப்புகள்






குளிக்கப்போன ரூம்மேட்டின்

பணத்தைத் திருடுவது

ஒழுக்கக்கேடான செயலல்ல

அவன்

பர்சிலுள்ள ஃபோட்டோவை

ரசிப்பதைக் காட்டிலும்








உலக அதிசயங்கள்:

  • ராக்கிக் கட்டி காசு வாங்காத பெண்
  • பெட்ரோல்டேங்க் நிரம்பியிருக்கும் இரவல் ஸ்ப்லெண்டர்
  • இண்டெர்வ்யூ கார்டு








'ஹலோ' சொல்லும் பெண்ணுக்கு

'லவ் யூ' புலம்புவதும்

'அன்பே' கிறுக்குவதும்

அப்பாவி ஆணுக்கும்

அறிவாளி ஆணுக்கும் உள்ள வித்யாசம்








மனிதர்களில் இரண்டு வகை-

  • அப்பாவிகள் ஏமாறுபவர்கள்
  • பெண்கள் ஏமாற்றுபவர்கள்

















செயற்கை அழகுப் பொருட்கள்:

  1. துவைக்க மறந்த துணிகள்
  2. மேஜையும் கலைந்து கிடக்கும் புத்தகங்களும்
  3. வாடகை கறக்கத்தெரியாத வீட்டு ஓனரின் முகம்


இயற்கை அழகுப் பொருட்கள்:

  • எல்லாமே, பெண்களைத் தவிர











8 comments:

Unknown said...

யப்பா கிருபா, ரொம்ப நொந்துபோய் கெடக்கறாப்ல இருக்கு. அது சரி, யாராவது அந்த நேர்நேர், நேர்நிரை சமாச்சாரத்துக்கு விளக்கம் கொடுங்கப்பா.. அப்புறம் மேல இருக்குற சில வரிகள் firefoxல சரியா தெரியமாட்டேங்குது. அதையும் என்னைமாதிரி IE வெறுப்பவர்களுக்காக கொஞ்சம் சரிபண்ணிட்டா நல்லா இருக்கும்.

மீனாக்ஸ் | Meenaks said...

அண்த்தே செலந்தி, மெய்யாலுமே ஒனக்கு நேர் நிரை எதுவும் பிரீயலியா? அடப்பாவமே. என்னடா இது தமியு எலக்கணத்துக்கு வந்த சோதன!!

Anonymous said...

புலம்பியவர்: ushaஉள்ள விட மாட்டேங்கிறாங்கப்பா

ரவியா said...

உஷா வாங்க உள்ளே .....இல்லட்டி âசங்களுக்கு ரோம்ப துளிருவிட்டுவிடும் ..

மீனாக்ஸ் | Meenaks said...

உஷா, உள்ளே வரவேற்க ஸ்பெஷல் ஏற்பாடுகள் ஏதும் இல்லை. பின்னூட்ட ஏரியாவில் யார் வேண்டுமானாலும் வந்திருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மீனாக்ஸ் | Meenaks said...

சிலந்தி, பத்ரி சொன்னதுபடி டெம்பிளேட்டில் கொஞ்சம் மாற்றியிருக்கிறோம். இப்போ நெருப்புநரியில ஒழுங்காத் தெரியுதா? :-)

Anonymous said...

புலம்பியவர்: S Krupa Shankarசிலந்தி ஸ்பெஷல்:

ரீ=நேர்
மா= நேர்
சென்=நேர்

இஷா=நிரை
தியோல்=நிரை

சுஷ்=நேர்
மிதா=நிரை
சென்=நேர்

நேர்நேர்நேர் நிரைநிரை நேர்நிரைநேர்
ரீமாசென் இஷாதியோல் சுஷ்மிதாசென்

உஷா:
பரவாயில்லை, அந்த 'தத்துவம்' எல்லாம் பெண்'மணி'களைத் தாக்கியதில்லைன்னு டைரி எழுதின பேச்சுலர் கனவுல சொன்னார். தைரியமா உள்ள வரலாமாம். ;-)

ரவியா:
ரவியா!!! 'உஷா'ர்! ஆண்களின் ப்ரச்சனை எல்லாம் சென்னைக்கு வந்தப்போ சொன்னேனே! பெண்களின் அராஜகம் பத்தி புட்டுப் புட்டு வெச்சேனே! ஆண்கள் முன்னேற்ற சங்கத்தை நீங்களும் காப்பாத்தணும், சொல்லிட்டேன்! :-)

பரணீ said...

நேர்நேர், நேர்நிரை சமாச்சாரத்துக்கு உங்க விளக்கம் செம டாப்புங்கோ !!!